For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரயில் பயணிகளுக்கு நவராத்திரி விரத சாப்பாடு - ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம்

இந்த நவராத்திரி காலத்தில் விரதம் மேற்கொள்பவர்கள் பயணம் செய்யும்போதும் விரதத்தை கடைபிடிக்க ஏதுவாக நவராத்திரி ஸ்பெஷல் உணவை வழங்க ஏர்பாடு செய்துள்ளது ஐஆர்சிடிசி.

Google Oneindia Tamil News

சென்னை: நவராத்திரி விரதத்தை வட இந்தியாவில் அனைவரும் சிறப்பாக கடைபிடிக்கும் பழக்கம் இருக்கிறது. இந்த நவராத்திரி காலத்தில் விரதம் மேற்கொள்பவர்கள் பயணம் செய்யும்போதும் விரதத்தை கடைபிடிக்க ஏதுவாக நவராத்திரி ஸ்பெஷல் உணவை வழங்க ஏர்பாடு செய்துள்ளது ஐஆர்சிடிசி.

நவராத்திரி தாளி, சபூதனா கிச்சடி, லஸ்ஸி, பழ சலட் ஆகிய உணவுகளையும் www.ecatering.irctc.co.in அல்லது Food-on-track ஆப் மூலம் ஆர்டர் செய்யலாம்.

IRCTC E Catering Menu During Navratri Vrat Ka Khana

நவராத்திரி பண்டிகையின் போது அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி, வெள்ளை மாளிகையில் விருந்து தடபுடலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும் ஒரு டம்ளரில் வெந்நீர் மட்டுமே குடித்துவிட்டு வந்தார். அவர் அப்போது நவராத்திரி விரதம் மேற்கொண்டிருந்தார். இதே போல பலரும் நவராத்திரி பண்டிகையின் போது வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்த்து விடுகின்றனர். ரயில் பயணிக்களுக்காக 'vrat ka khana'என்ற பெயரில் நவராத்திரி விரத உணவை ஐஆர்சிடிசி வழங்குகிறது.

இந்த சிறப்பு விருந்து சில தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில் நிலையங்களில் மட்டும் கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாக்பூர், அம்பாலா, ஜெய்ப்பூர், இடார்சி, ஜான்சி, நாசிக், ராட்லாம், தவுந்த், மதுரா, நிஜாமுதீன், லக்னோ ரயில் நிலையங்களில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இது தவிர நவராத்திரி தாளி, சபூதனா கிச்சடி, லஸ்ஸி, பழ சலட் ஆகியனவற்றை www.ecatering.irctc.co.in அல்லது Food-on-track ஆப் மூலம் ஆர்டர் செய்யலாம்.

ஆர்டர் செய்யும்போது பிஎன் ஆர் நம்பரைக் குறிப்பிட வேண்டும். ஆனால், 2 மணி நேரத்துக்கு முன்னதாகவே ஆர்டரை கொடுத்துவிட வேண்டும். உணவு கிடைத்தவுடன் கூட பணத்தை வழங்கலாம். நவராத்திரி பண்டிகை கால உணவு ரயில் பயணிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

English summary
The Railways' catering arm said that keeping in mind the ritualistic fast observed by many during the festival, it has been decided to introduce them in its menu from October 10-18.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X