For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வருமான வரி ரிட்டன்: லீவு நாட்களான 29, 30,31ம் தேதிகளிலும் தாக்கல் செய்யலாம்

வருமான வரித் தாக்கல் செய்பவர்களின் வசதிக்காக விடுமுறை நாட்களான 29ம் தேதி முதல் 30ம் தேதி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

By Mayura Akhilan
Google Oneindia Tamil News

டெல்லி: வருமான வரித் தாக்கல் செய்பவர்களின் வசதிக்காக விடுமுறை நாட்களான 29ம் தேதி முதல் 30ம் தேதி வரையிலும் திறக்கப்பட்டிருக்கும் என்று வருமான வரித்துறை தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.

2016-17 மற்றும் 2017-18ம் ஆண்டுக்கான வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யாதவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுமாறும் வருமான வரித்துறை தலைமை அலுவலகம் அறிவித்துள்ளது.

IT Return filing will remain open from 29 - 31

2015-16 மற்றும் 2016-17ம் ஆண்டுக்கான வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான காலக்கெடு வரும் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்குமேல் மேற்குறிப்பிட்ட ஆண்டுக்கான வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வது என்பது முடியாத காரியமாகும்.

நடப்பு நிதியாண்டு முடிவடைவதற்கு இன்னும் மூன்று நாட்களே உள்ளன. இந்த நிலைமையில் இதற்கு முந்தைய நிதியாண்டிற்கான (2016-17) மற்றும் அதற்கு முந்தையை ஆண்டான 2015-16ம் ஆண்டுக்கும் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கான இறுதிக் காலக் கெடுவானது வரும் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யாதவர்களுக்கு இது ஒரு கடைசி வாய்ப்பாகும்.

முந்தைய ஆண்டுக்கான வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யாதவர்களை ரிட்டன் தாக்கல் செய்யுமாறு வருமான வரித் துறையின் சார்பில் நினைவூட்டும் மின்னஞ்சலும், மொபைல் ஃபோன் வழியாக குறுஞ்செய்தியும் அவ்வப்போது அனுப்பப்பட்டு வருகிறது.

வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய இதோ இன்னும் நான்கு நாட்களே உள்ளன. அதிலும் வியாழன் அன்று மகாவீர் ஜெயந்தி, வெள்ளிக்கிழமை புனித வெள்ளி மற்றும் சனிக்கிழமை வார விடுமுறை என்று தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை விடப்படுவதால் கடைசி நேரத்தில ரிட்டன் தாக்கல் செய்யலாம் என்று இருப்பவர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வோரின் நலனை முன்னிட்டு விடுமுறை நாட்களான வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய மூன்று நாட்களிலும் நாட்டின் அனைத்து வருமான வரித் துறை அலுவலகங்களும் செயல்படும் என்றும், இந்த வாய்ப்பை தவற விடாமல் பயன்படுத்தி, இதுவரை வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யாதவர்கள் இந்த மூன்று நாட்களிலும் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்துகொள்ளுமாறு வருமான வரித் துறையின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடைசி நேரத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்கு, இதுவரையில் தங்களின் வருமான வரி ரிட்டனை தாக்கல் செய்யாத அனைவரும் முன்கூட்டியே வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வது நல்லது. வருமான வரி தாக்கல் செய்ய வருபவர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு கவுண்ட்டர்களும், வரி ஆலோசகர்களும் நியமிக்கப்படுவார்கள் என்றும் வருமான வரித் துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்வதற்கும், மற்றும் அது தொடர்பான அனைத்து துணை ரிட்டன்களையும் திருத்தி அமைக்கப்பட்ட (Revised Returns) வருமான வரி ரிட்டன்களையும் தாக்கல் செய்வதற்கு வசதியாக வரும் 29, 30 மற்றும் 31 ஆகிய மூன்று நாட்களிலும் நாட்டின் அனைத்து வருமான வரி அலுவலகங்களும் செயல்படும் என்றும், இந்த வாய்ப்பை பயன்படுத்தி வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்துகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

2015-16 மற்றும் 2016-17ம் ஆண்டுக்கான வருமான வரி ரிட்டன்களை தாக்கல் செய்வதற்கான இறுதிக் காலக் கெடுவான மார்ச் 31ம் தேதியை தவற விட்டால் அதன்பிறகு முந்தைய ஆண்டுக்கான வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்ய இயலாது என்பது குறிப்பிடத்தக்கது.

வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யாத அனைவருக்கும் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்யாததற்கான காரணம் என்ன? என்று நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்கும் முன்பாக உடனே ரிட்டன் தாக்கல் செய்து விடுவது நல்லது.

English summary
The last date for Income tax return and revised return filing for the financial year 2015-16 and 2016-17 from 29th March to 31st March. To facilitate filing returns and completion of other allied work, all income tax offices throughout India shall remain open from 29th to 31st March 2018. Finance ministry statement said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X