For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2 லட்சம் இந்திய ஐடி ஊழியர்களை கொத்திக்கொண்டு போக ஜப்பான் ரெடி

இந்தியாவில் இருந்து, தகுதியுள்ள 2லட்சம் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்த ஜப்பான் அரசு முன்வந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    2 லட்சம் இந்திய ஐடி ஊழியர்களை அழைக்கும் ஜப்பான்- வீடியோ

    பெங்களூரு: தகவல் தொழில்நுட்பத்துறையில் திறமை வாய்ந்த 2 லட்சம் இந்தியப் பொறியாளர்களை தேர்ந்தெடுத்து தங்கள் நாட்டில் பணியமர்த்த ஜப்பான் தயாராகி வருகிறது.

    இடுக்கண் களைவதாம் நட்பு..

    இடுக்கண் களைவதாம் நட்பு..

    என்ற திருக்குறளுக்கு அர்த்தம் சொல்வதுபோல இருக்கிறது ஜப்பான் நாட்டின் தற்போதைய நடவடிக்கை. ஆம், அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவிக்கு வந்த பின்பு, அவர் அடிக்கடி எச்.1பி விசா என்ற துருப்பு சீட்டை வைத்துக்கொண்டு, அமெரிக்காவில் பணி புரியும் இந்திய ஐடி இளைஞர்களையும், அமெரிக்கா சென்று ஐடி நிறுவனங்களில் வேலை செய்யவேண்டும் என்ற கனவோடு இந்தியாவில் இருக்கும் ஐடி இளைஞர்களின் கனவுகளை கலைக்க முற்பட்டுக்கொண்டு இருக்கிறார்.

    எச் 1 பி விசா அச்சுறுத்தல்

    எச் 1 பி விசா அச்சுறுத்தல்


    டொனால்டு டிரம்பின் இந்த பயமுறுத்தலால், இந்தியாவில் உள்ள ஐடி படித்த இளைஞர்களும், அமெரிக்காவில் உள்ள ஐடி நிறுவனங்களில் பணிபுரியும் இந்திய இளைஞர்களும், செய்வதறியாது ஒரு விதி பயத்துடனும் திகைப்புடனும் உள்ளனர். கூடவே, தங்களின் தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ற வேலை வேறு எந்த நாட்டிலாவது கிடைக்காதா? என்று தேடிவருகின்றனர்.

    2 லட்சம் ஐடி ஊழியர்கள்

    2 லட்சம் ஐடி ஊழியர்கள்

    இந்திய ஐடி இளைஞர்களின் மனநிலையை இந்திய அரசு புரிந்துகொண்டதோ, இல்லையோ, நம் நட்பு நாடான ஜப்பான் நன்கு புரிந்துவைத்துள்ளது. ஆம், இந்தியாவில் இருந்து, தகுதியுள்ள 2லட்சம் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்த ஜப்பான் அரசு முன்வந்துள்ளது.

     ஜப்பானில் வேலையிருக்கு

    ஜப்பானில் வேலையிருக்கு

    உழைப்பிற்கும், சுறுசுறுப்பிற்கும் முன்னுதாரணமாக விளங்கம் ஜப்பான், அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சியுடன், மேலும் அதிவிரைவான தொழில்நுட்ப வளர்ச்சியை நோக்கி செல்லும் உத்வேகத்தில் உள்ளது. அதற்கான தகுதி மற்றும் திறமை வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் கூடுதலாக தேவைப்படுவதால், திறமையான தொழில்நுட்ப வல்லுநர்களை இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுத்து பணியில் அமர்த்த ஜப்பான் அரசு முன்வந்துள்ளது.

    ஜப்பான் குடியுரிமை

    ஜப்பான் குடியுரிமை

    பெங்களூருவில், ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பும் (Japan External Trade Organization-JETRO) பெங்களூரூ தொழில் மற்றும் வர்த்தக அமைப்பும் இணைந்த ஏற்பாடு செய்திருந்த கூட்டுறவு கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய ஜப்பான் ஜெட்ரோ அமைப்பின் நிர்வாக துணைத் தலைவர் ஷிஜிகி மாட்டா, ஜப்பானின் தொழிநுட்ப வளர்ச்சிக்கு வலுசேர்க்கும் விதமாக மேலும் சுமார் 2 லட்சம் தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுநர்களை இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுத்து அவர்களை பணியில் அமர்த்தி அவர்களுக்கு ஜப்பான் நாட்டின் குடியுரிமையைம் வழங்க முடிவு செய்துள்ளோம்.

    8 லட்சம் பேருக்கு வேலை

    8 லட்சம் பேருக்கு வேலை

    இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களை பணியில் அமர்த்துவதன் மூலம் ஜப்பானின், அதிவேக முன்னேற்றத்திற்கும், தொழில்நுட்ப கண்டுபிடிப்புகளுக்கும் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களின் திறமை கூடுதல் பலம் சேர்க்கும்

    மேலும் அவர் தெரிவிக்கையில், ஜப்பானில் தற்போது 9 லட்சம் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள் இருந்தாலும், சுமார் 2லட்சம் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களை உடனடியாக தேர்ந்தெடுத்து பணியமர்த்த உள்ளோம். மேலும் இந்த எண்ணிக்கையானது வரும் 2030ம் ஆண்டிற்குள் சுமார் 8 லட்சமாக உயரும் என்று தெரிவித்தார்.

    கை கொடுக்கும் ஜப்பான்

    கை கொடுக்கும் ஜப்பான்

    ஜப்பானின் இந்த செயலானது, நீ என்ன சொல்றது, இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலை கிடையாது என்று சொல்வதற்கு, இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு வேலை கொடுப்பதற்கு நான் இருக்கிறேன்! என்று சொல்வது போல் உள்ளது.

    English summary
    Japan looks for open its doors for 2 lakh IT professionals from India for their technological advancement and need for more IT assistance. The executive vice president of Japan External Trade Organization (JETRO) Shigeki Maeda said that Japan is seeking assistance as it is looking for most advanced IT capabilities.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X