For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜவுளிக் கடைகளில் இனி உட்கார்ந்து வேலை செய்யலாம்.. கேரளாவில் இன்னொரு புரட்சிகர முடிவு!

கேரளக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான சட்டத்தில் தொழிலாளிகளுக்குச் சாதகமான திருத்தங்கள்

Google Oneindia Tamil News

திருவனந்தபுரம்: கேரளாவில் துணிக்கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் ஊழியர்கள் உட்கார்ந்துகொண்டே வேலை பார்க்கும் அனுமதியை வழங்கும் வகையில் அவசரச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. இது நாட்டிலேயே முன்மாதிரியான சட்டம் என பாராட்டைப் பெற்றுள்ளது. இந்த சட்டம் அக்டோபர் 26 முதல் அமலுக்கு வந்துள்ளது.

1960-ம் வருடத்திய 'கேரள கடைகளும் வணிக நிறுவனங்களும்’ சட்டத்தில் தொழிலாளிகளுக்கு சாதகமான திருத்தங்கள் செய்வது தொடர்பான மசோதாவுக்கு ஆளுநர் அவசர சட்ட ஒப்புதல் அளித்துள்ளார்.

நாடு முழுவதும் துணி, நகைக் கடைகள் மற்றும் உணவகங்களில் வேலை பார்ப்பவர்கள் உட்கார்வதற்கு அனுமதி கிடையாது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் கேட்கவே வேண்டாம் கழிவறைக்கு செல்ல கூட அனுமதி கிடைப்பதில்லை. வாடிக்கையாளர் இல்லையென்றாலும், வேலை முடியும் வரை ஊழியர்கள் நின்றுகொண்டுதான் இருக்க வேண்டும். இதனால் பல ஊழியர்கள் உடல் நல பாதிப்புக்கும், மன அழுத்தத்திற்கும் ஆளாகினர்.

தொழிலாளர்கள் போராட்டம்

தொழிலாளர்கள் போராட்டம்

இந்த நிலையில் பணி நேரத்தில் உட்காரவும், ஓய்வெடுக்கவும் வாய்ப்பு வழங்க வேண்டும் என கேரளாவில் பல்வேறு மையங்களில் பெண் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

உட்கார்ந்து வேலை செய்ய சட்டம்

உட்கார்ந்து வேலை செய்ய சட்டம்

இதையடுத்து, 1960ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ‘கேரளக் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கான சட்டத்தில் தொழிலாளிகளுக்குச் சாதகமான திருத்தங்கள் செய்வது தொடர்பான மசோதாவுக்கு அம்மாநில ஆளுநர் அவசர சட்ட ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து, இந்த சட்டம் அக்டோபர் 26 முதல் அமலுக்கு வந்துள்ளது. புதிய சட்ட மசோதாவின்படி, வேலை நேரங்களில் உட்கார்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஒரு லட்சம் வரை அபராதம்

ஒரு லட்சம் வரை அபராதம்

இந்த விதிமுறையை மீறுபவர்களுக்கு, மேலே கூறப்பட்ட சட்டத்தின் கீழ் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும். 1960ஆம் ஆண்டு சட்டத்தின் 29வது பிரிவின்படி முதல் முறை விதி மீறும்போது, 5,000 ரூபாய் முதல் 1 லட்சம் வரை அபராதமும், இரண்டாவது முறை விதி மீறும்போது பத்தாயிரம் ரூபாயும், தொடர்ந்து விதிமுறையை மீறும்போது இரண்டு லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாள் லீவு

ஒரு நாள் லீவு

புதிய சட்ட மசோதா, பெண்களுக்கு நைட் ஷிஃப்ட் வேலை அளிக்கவும் வழிவகை செய்துள்ளது. ஆனால், 5 பேர் கொண்ட குழுவில் 2 பேராவது பெண்கள் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும், இரவு பயண வசதியையும் நிறுவனமே செய்துதர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் ஒவ்வொரு ஊழியருக்கும் வாரத்தில் ஒரு நாளாவது முழுமையாக விடுப்பு அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக தொழிலாளர்கள்

தமிழக தொழிலாளர்கள்

தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் உள்ளன. இதில் வேலை செய்யும் தொழிலாளர்கள், பெண் ஊழியர்கள் நின்று கொண்டுதான் வேலை செய்கின்றனர். கேரளா போல தமிழ்நாட்டிலும் இது போல சட்டம் இயற்றினால் லட்சக்கணக்கான ஊழியர்கள் பயனடைவார்கள். அரசு ஆலோசிக்குமா?.

English summary
The Kerala Government has promulgated an Ordinance to give employees the ‘right to sit’, by amending the provisions of Kerala Shops and Establishments Act 1960. The Ordinance titled ‘The Kerala Shops and Establishments(Amendment) Ordinance 2018’ was promulgated by the Governor of Kerala and notified in the Gazette on October 4.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X