For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பட்ஜெட் 2018: என்னென்ன வரிகள்... முக்கிய அம்சங்கள் தெரியுமா?

நிதியமைச்சர் அருண் ஜெட்லி 2018-19-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார்.பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கும் வார்த்தைகளுக்கான அர்த்தம் என்னவென்று பார்க்கலாம்.

By Staff
Google Oneindia Tamil News

Recommended Video

    2018 பட்ஜெட் முக்கிய வரிகள் என்ன தெரியுமா ?

    டெல்லி: அருண் ஜெட்லி தாக்கல் செய்ய உள்ள பட்ஜெட் எப்படி இருக்கும் என்று எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கும்போது பட்ஜெட்டில் இடம்பெற்றிருக்கும் வார்த்தைகளுக்கான அர்த்தம் என்னவென்று பார்க்கலாம்.

    நிதியமைச்சர் அருண் ஜெட்லி 2018-19-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு முழு பட்ஜெட்டைத் தாக்கல் செய்வதற்குக் கிடைத்துள்ள கடைசி நிதியாண்டு இது.

    இந்த பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம், ஊரக வளர்ச்சி, விவசாயம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டம் போன்றவற்றுக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய பட்ஜெட் பற்றி தெரிந்து கொள்வோம்.

    வரவு செலவு

    வரவு செலவு

    மாதச் சம்பளம் வாங்குவோர் ஒரு மாதத்துக்கான வரவு, செலவுகளுக்கு எப்படி திட்டம் போடுகிறார்களோ அதுபோலவே மத்திய அரசும் ஒரு வருடத்திற்கு என்ன வருவாய் வரும், என்ன செலவு செய்யப்போகிறோம் என்பதை உத்தேசமாக மதிப்பிட்டு தயாரிக்கும் ஒரு வரைவு அறிக்கையாகும். சுருக்கமாக சொல்வதானால் வரும் ஆண்டில் ஒரு ரூபாய் வருமானத்தில் எவ்வளவு செலவு செய்யப்போகிறோம் என்பதை சொல்லும் திட்ட அறிக்கையாகும்.

    வரிகள் என்னென்ன?

    வரிகள் என்னென்ன?


    நேரடி வரிகள் (Direct Taxes) என்பது ஒவ்வொருவரும் தங்களின் வருமானத்திற்கான வரியை (Income Tax. Corporate Tax) தாங்களே கணக்கிட்டு அரசுக்கு செலுத்துவது. மறைமுக வரிகள் (Indirect Taxes) என்பது நாம் வாங்கும் பொருளுக்கும் நாம் பயன்படுத்தும் சேவைகளுக்கும் செலுத்தும் வரிகளாகும். தொலைபேசி கட்டணம், சூப்பர் மார்கெட்டில் வாங்கும் பொருட்கள் போன்றவை இதில் அடங்கும்.

    ஜிஎஸ்டி

    ஜிஎஸ்டி

    நாம் வாங்கும் பொருட்களுக்கும், பயன்படுத்தும் சேவைகளுக்கும் செலுத்தும் வரிகளாகும். சுருக்கமாக சொல்வதென்றால், ஒரு பொருளை நாமே நேரடியாக வாங்கினால் அது சரக்கு (Goods) என்பதாகும். அதே பொருளை கடைக்காரர் நமக்கு கொண்டுவந்து கொடுத்தால் அவருடைய சேவைக்காகவும் நாம் அவருக்கு செலுத்துவது சரக்கு மற்றும் சேவை வரியாகும் (Goods and Service Tax).நாம் பயன்படுத்தும் தொலைபேசி சேவைக்காக செலுத்துவது சேவை வரி(Service Tax) மட்டுமே ஆகும்.

    கஸ்டம்ஸ் வரி

    கஸ்டம்ஸ் வரி


    ஒரு பொருளை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும்போது அதற்காக இறக்குமதி செய்பவர் அரசுக்கு செலுத்துவது சுங்கவரியாகும். இது பெரும்பாலும் நுகர்வோரின் தலையில்தான் கட்டப்படும்.

    வருவாய் பற்றாக்குறை

    வருவாய் பற்றாக்குறை

    நிதிப்பற்றாக்குறை என்பது மாத சம்பளதாரர்கள் மாதக் கடைசியில் செலவுக்கு பணம் இல்லாமல் அக்கம்பக்கத்தில் கையேந்துவதுபோல, திட்டமிட்ட செலவுகளுக்கு திட்டமிடாமல் நிதி இல்லாமல் வட்டி இல்லா கடனாக மக்களிடத்தில் வசூலித்து திட்டச் செலவுகளை மேற்கொள்வதாகும். ஏற்கனவே திட்டமிட்ட செலவுகளுக்கும், திட்டமிட்ட வருமானத்திற்கும் இடையில் உள்ள வேறுபாடாகும். அதாவது நாம் எதிர்பார்க்கும் மாதச்சம்பளம் வராமல் நின்றுபோனால், நாம் ஏற்கனவே திட்டமிட்ட செலவுகளை செய்ய முடியாமல் போகும்போது ஏற்படும் பற்றாக்குறை வருவாய் பற்றாக்குறை ஆகும்.

    மத்திய அரசு கடன்

    மத்திய அரசு கடன்

    நடப்பு ஆண்டுக்கான பற்றாக்குறையோடு ஏற்கனவே வாங்கிய கடனுக்கான வட்டியையும் கழித்துவிட்டு மீதம் இருக்கும் தொகையே ஆகும். இந்த முதன்மை பற்றாக்குறைக்கும் சேர்த்தே வரும் ஆண்டில் வாங்கும் மத்திய அரசு கடன் வாங்கும்.

    பணவியல் கொள்கை

    பணவியல் கொள்கை

    நிதிக்கொள்கை என்பது வரும் ஆண்டில் எந்த மாதிரியான செலவுகளை செய்யப்போகிறது என்றும் அதற்கான வரி வருவாய் என்ன? அதனால் நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்படும் என்ன? என்பதை விளக்குவதாகும்.

    பணவியல் கொள்கை என்பது மத்திய ரிசர்வ் வங்கியானது (RBI) ஒவ்வோரு காலாண்டிலும், வங்கிகளுக்கு அளிக்கும் கடனுக்கான வட்டி மற்றும் பிற வங்கிகளிடம் இருந்து வாங்கும் கடனுக்கு செலுத்தப்போகும் வட்டி போன்றவற்றை விளக்குவதாகும்.

    பணவீக்கம்

    பணவீக்கம்

    தேவைக்கும் (Demand) வரத்துக்கும் (Supply) உள்ள இடைவெளியாகும். சுருக்கமாக சொல்வதானால், நாம் வாங்க நினைக்கும் ஒரு பொருளானது சந்தையில் குறைவாக இருக்கும். அப்போது வாங்குவதற்கு போட்டி ஏற்படும். அதனால் நாம் வாங்க நினைக்கும் பொருளுக்கு அதிக விலை கொடுக்க நேரிடும். அதுவே பணவீக்கமாகும்.

    வருவாய் பட்ஜெட்

    வருவாய் பட்ஜெட்


    மூலதன பட்ஜெட் என்பது மத்திய அரசின் நீண்டகால முதலீடுகள், பங்குகள், கடன்கள் மீதான வரவுகளையும், அதற்கான செலவுகளையும், புதிதாக மேற்கொள்ளவிருக்கும் திட்டங்களையும் குறிப்பதாகும். வருவாய் பட்ஜெட் என்பது மத்திய அரசுக்கு நேரடியாக வரும் வருமான வரி, நிறுவனங்கள் செலுத்தும் வரி, சுங்க வரிகள் மற்றும் கலால் வரிகள் போன்றவற்றையும், மத்திய அரசு பெற்ற கடன்களுக்கான வட்டி மற்றும் செலவுகளையும் உள்ளடக்கியதாகும்.

    நிதி மசோதா தாக்கல்

    நிதி மசோதா தாக்கல்

    நிதி மசோதா என்பது மத்திய பட்ஜெட்டை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பின்பு, இதற்கான விளக்க அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதாகும். இதில் வரும் ஆண்டிற்கான வரிகள், மாற்றப்பட்ட வரிமுறைகள், தற்போரு அமலில் உள்ள வரிமுறைகள் ஆகியவை இடம்பெற்றிருக்கும். நிதி மசோதாவானது நிதிச் சட்டங்கள் விதி எண் 110ன் படி தாக்கல் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு 75 நாட்களுக்குள் பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறப்படவேண்டியது கட்டாயமாகும்.

    செலவுகளுக்கான நிதி

    செலவுகளுக்கான நிதி

    நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெறப்போகும் சமயங்களிலும், இடைக்கால அரசு பதவியில் உள்ள போதும் மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு அரசு மேற்கொள்ளப்போகும் செலவுகளுக்கு தேவைப்படும் நிதியை அரசு கருவூலத்தில் இருந்து பெறுவதற்கு அனைத்து நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களிடம் ஒப்புதல் பெறவேண்டும். அதற்கு மேற்கொள்ளும் வாக்கெடுப்பு முறையே மசோதா மீதான வாக்கெடுப்பாகும் (Vote on account).

    மானியத்திற்கு நிதி

    மானியத்திற்கு நிதி

    ஒரு திட்டத்திற்கு ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட தொகைக்கு அதிகமாக செலவு செய்ய நேரும்போது அதற்கு தேவைப்படும் நிதியைப் பெறுவதற்க பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெறவேண்டியது மிக அவசியமாகும். கூடுதலாக மதிப்பிட்டப்பட்ட தொகைக்கான அனைத்து ஆவணங்களையும் பாராளுமன்றத்தில் சமர்பிக்கவேண்டும். பாராளுமன்றம் அதனை மத்திய தணிக்கைக் குழுவிற்கு அனுப்பி அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து, தேவைப்படும் மாற்றங்களை செய்ய ஆலோசனைகளையும் வழங்கும். தேவையான மாற்றங்களை செய்த பின்னர் தேவைப்படும் கூடுதல் மானியத்திற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    திருத்தப்பட்ட மதிப்பீடு

    திருத்தப்பட்ட மதிப்பீடு

    புதியதாக மேற்கொள்ளவிருக்கும் திட்டத்திற்கு எவ்வளவு நிதி தேவைப்படும், எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது போன்றவை பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கும். ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டங்களுக்கு கூடுதல் நிதி தேவைப்படுமானால், அரையாண்டின் முடிவில் அந்த திட்டங்களுக்கு தேவைப்படும் கூடுதல் நிதிக்கான திட்டத்தை மறு மதிப்பீடு அல்லது திருத்தப்பட்ட மதிப்பீடு (Revised Estimate) செய்வதாகும். இதற்கு பாராளுமன்றத்தின் வாக்கெடுப்பிற்கு விடத் தேவையில்லை. இருந்தாலும் நாடாளுமன்ற ஒப்புதல் பெற்ற பின்புதான் கூடுதல் செலவுகளை மேற்கொள்ளமுடியும்.

    பொது கணக்குக் குழு

    பொது கணக்குக் குழு

    ஒரு திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை அதன் துணைத் திட்டங்களுக்கு அனுமதிக்கப்பட்ட வரம்பிற்குள் மாற்றி மறு-ஒதுக்கீடு செய்வதாகும். இந்த ஒதுக்கீட்டை அதன் தலைவர் அந்த நிதி ஆண்டிற்குள் மாற்றி மறு-ஒதுக்கீடு செய்வதற்கு அதிகாரம் உள்ளது. மத்திய பொதுக் கணக்குக் குழுவின் தணிக்கை அதிகாரி இந்த மறு-ஒதுக்கீட்டை ஆய்வு செய்து தேவையான மாற்றங்களை செய்வதற்கு ஆலோசனை அளிக்கிறார்.

    நிதி ஒதுக்கீடு

    நிதி ஒதுக்கீடு

    கடந்த ஆண்டின் பட்ஜெட் விளைவுகளை ஒவ்வொரு அமைச்சகத்திடம் இருந்தும் நிதி அமைச்சகம் சேகரித்து வெளியிடுகிறது. இது ஒரு மாணவனின் மதிப்பீட்டு அட்டவணை (Rank Card or Progress Report). இதன் மூலம் வரும் நிதி ஆண்டில் அந்தந்த அமைச்சகத்தின் மூலம் செய்யப்படும் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். மேலும் ஒதுக்கப்பட்ட நிதி சரியாக செலவழிக்கப்படுகிறதா என்று கண்காணிக்கவும் முடியும்.

    சபாநாயகர் முடிவு

    சபாநாயகர் முடிவு

    நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அமைச்சகத்தின் செலவினங்களையும் ஆராய்ந்து ஆய்வு செய்ய போதுமான கால அவகாசம் இருப்பதில்லை. எனவே ஒவ்வொரு அமைச்சகத்தின் கோரிக்கைகள் மற்றும் மானியங்களையும் நாடாளுமன்றத்தின் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காலம் முடிந்தவுடன், லோக்சபா சபாநாயகர், அனைத்து அமைச்சகத்தின் செலவினங்களையும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதா இல்லையா என்பதை முடிவு செய்யாமல் மானியக் கோரிக்கைகளை ஓட்டெடுப்பிற்கு விட்டுவிடுவதால் இதனை கில்லட்டின் எனப்படுவதுண்டு. கில்லட்டின் என்பது ஃபிரெஞ்சு புரட்சியின்போது ஆட்சியாளர்கள், புரட்சியை ஒடுக்குவதற்காக புரட்சி செய்பவர்களை ஒட்டுமொத்தமாக கில்லட்டின் இயந்திரத்தின் முன் நிற்க வைத்து அவர்களை கொல்வதாகும்.

    வெட்டு தீர்மானம்

    வெட்டு தீர்மானம்

    நிதி மசோதாவின் மீதான மானியக் கோரிக்கைகளின் மீது நாடாளுமன்ற எதிர்க் கட்சி உறுப்பினர்கள் விவாதிக்கவும் அவற்றை எதிர்க்கவும் கொடுக்கப்பட்ட ஒரு ஆயுதமாகும். இது பெரும்பாலும் மத்திய அரசின் மீதான நம்பகத் தன்மையை சோதிப்பதற்கு எடுத்துக்கொள்ளப்படும் ஆயுதமாகும். வெட்டுத் தீர்மானம் வெற்றி பெற்றால் மத்திய அரசு கவிழும்.

    எதிர்பாராத செலவு

    எதிர்பாராத செலவு

    அனைத்து விதமான வருமானங்களும் செலவினங்களும் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே செலவு செய்யப்படுகின்றன. அதில் எதிர்பாராமல் ஏற்படும் செலவினங்களைத் தவிர சட்டத்திற்கு புறம்பான எந்தவிதமான செலவினங்களும் செய்யப்படுவதில்லை என்பதே ஒருங்கிணைந்த நிதி ஆதாரம் ஆகும்.

    நாடாளுமன்ற ஒப்புதல்

    நாடாளுமன்ற ஒப்புதல்

    பொதுக் கணக்கு என்பது இந்திய அரசியலமைப்பு சட்டம் 266 உட்பிரிவு 1ன் படி செயல்படுவதாகும். தொழிலாளர் சேம நலநிதி (Provident Funds), தபால் நிலைய சேமிப்பு கணக்குகள் (Post Office Savings Accounts) போன்றவை பொது மக்களின் வருங்கால சேமிப்புக்காக மத்திய அரசே நிர்வகித்துவரும் கணக்குகளாகும். இவற்றில் உள்ள பணம் அரசுக்கு சொந்தமானது அல்ல. இந்த பணத்தை திரும்ப செலுத்துவதற்கு நாடாளுமன்ற ஒப்புதல் பெறத் தேவையில்லை.

    குறைந்த பட்ச மாற்று வரி ( MAT)

    குறைந்த பட்ச மாற்று வரி ( MAT)


    நிறுவனங்கள் தங்களின் வருவாய்க்கு மத்திய அரசுக்கு செலுத்தும் வருமான வரியாகும். குறைந்த பட்ச மாற்று வரி என்பது ஒரு நிறுவனம் வரி வரம்பிற்குள் இல்லாவிட்டாலும் குறைந்த பட்சம் செலுத்த வேண்டிய வரியாகும்.

    முதலீட்டை திரும்பப் பெறுதல் என்பது அரசுத் துறை நிறுவனங்களில் அரசு முதலீடு செய்துள்ள பங்குகள் அனைத்தும் மத்திய அரசின் சொத்துக்கள் ஆகும். மத்திய அரசு தேவைப்படும்போது இவற்றை விற்று பணமாக திரும்பப் பெறுவது என்பது சொத்துக்களை விற்று பணமாக மாற்றுவதாகும். எனவே இது மத்திய அரசு தான் செய்துள்ள முதலீடுகளை திரும்ப பெறுவதாகும்.

    English summary
    Most of the public knows only the revenues and taxes into the Budget. There are a few words contents in our Budget book. We have to know all of those budget glossary.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X