For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'ஐபோன் 6 ப்ளஸ்' போன்களுக்கு ஆர்டர் செய்துவிட்டு வாரக்கணக்கில் காத்திருக்கும் வாடிக்கையாளர்கள்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

வாஷிங்டன்: ஆப்பிள் ஐபோன்6 மற்றும் 6 ப்ளஸ் மாடல்களை பெற ஒரு மாதம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் தனது ஐபோன்6 மற்றும் 6பிளஸ் ஆகிய மாடல்களை சில தினங்களுக்கு முன்பு அமெரிக்காவில் அறிமுகம் செய்தது. வரும் 19ம்தேதி முதல் அந்த போன்கள் அமெரிக்க சந்தையில் கிடைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதே நேரம் ஆன்லைன் ஆர்டர்களை கடந்த வியாழக்கிழமை முதல் ஆப்பிள் ஏற்கத் தொடங்கியுள்ளது.

Larger Apple iPhone shipments delayed amid record orders

இதில் ஐபோன்6 டெலிவரியில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் விலை உயர்ந்த 6பிளஸ் செல்போன்களுக்கு பற்றாக்குறை நிலவுகிறது. ஆர்டர் செய்த பிறகு 3 முதல் நான்கு வாரம் காத்திருக்க வேண்டி வரும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுவரை ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து வெளியான போன்களிலேயே ஆப்பிள் 6 ரகத்திற்குதான் அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், எனவே உற்பத்தியை அதிகரித்துதான் வாடிக்கையாளர்களின் ஆர்டர்களை பூர்த்தி செய்ய வேண்டி உள்ளதாகவும் ஆப்பிள் அறிவித்துள்ளது.

ஆப்பிள் 6 வகை போன்கள் இந்திய மார்க்கெட்டில் அடுத்த மாதமும், சீனாவில் இவ்வருட இறுதியிலும் விற்பனைக்கு கிடைக்க உள்ளன. உலகிலேயே சீனாதான் மிகப்பெரிய ஸ்மார்ட் போன் சந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Customers may have to wait three to four weeks to get their hands on Apple Inc's iPhone 6 Plus, after a record number of orders for the company's latest smartphones strained available supply.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X