For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"புகை"யில் கொண்டு போய் ரூ. 38,000 கோடியைப் போட்ட எல்ஐசி!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவின் மிகப் பெரிய அரசு காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி நிறுவனம், சிகரெட் உள்ளிட்டவற்றைத் தயாரிக்கும் ஐடிசி நிறுவனத்தில் பெருமளவிலான முதலீட்டைச் செய்துள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

எல்ஐசியின் முதலீடுகளிலேயே மிகப் பெரிய முதலீடு ஐடிசி நிறுவன முதலீடுதான் என்பதும் அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது.

கிட்டத்தட்ட ரூ. 38,000 கோடியை ஐடிசி நிறுவனத்தில் எல்ஐசி போட்டுள்ளதாம். எல்ஐசியில் முதலீடு செய்துள்ள காப்பீட்டு பாலிசிதாரர்களின் தொகையில் 10 சதவீதமாகும் இது.

முன்னணி சிகரெட் தயாரிப்பாளர்

முன்னணி சிகரெட் தயாரிப்பாளர்

இந்தியாவில் சிகரெட் புகைப்பவர்கள் மத்தியில் அதிகம் புழங்குவது ஐடிசி நிறுவன சிகெரட்கள்தான்.

ரொம்ப மோசமான இந்தியா

ரொம்ப மோசமான இந்தியா

உலக அளவில் அதிக அளவில் புகை பிடிப்போர் வரிசையில் இந்தியர்கள் முக்கிய இடம் பிடித்துள்ளனர். உலக அளவில் 12 சதவீத புகைப்பிடிப்பாளர்கள் இந்தியாவில்தான் உள்ளனர்.

10.5 லட்சம் உயிர்கள் காலி

10.5 லட்சம் உயிர்கள் காலி

இந்தியாவில் புகைபிடிக்கும் பழக்கம் காரணமாக வருடத்திற்கு 10.5 லட்சம் இறக்கிறார்கள் என்று ஒரு புள்ளிவிவரக் கணக்கு கூறுகிறது.

இதில் போயா இத்தனை கோடி

இதில் போயா இத்தனை கோடி

இப்படிப்பட்ட சிகரெட்டை தயாரிக்கும் ஐடிசி நிறுவனத்தில் உயிர் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்திருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ரிலையன்ஸுக்கு 30,000 கோடி

ரிலையன்ஸுக்கு 30,000 கோடி

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் ரூ. 30,000 கோடியை எல்ஐசி முதலீடு செய்துள்ளது.

ஸ்டேட் பாங்க்கில்

ஸ்டேட் பாங்க்கில்

அதேபோல பாரத ஸ்டேட் வங்கியில் ரூ. 29,000 கோடி முதலீடு செய்துள்ளது. லார்சன் அன்ட் டூப்ரோவில் ரூ. 25,000 கோடி முதலீடு செய்யபப்ட்டுள்ளது.

ஓஎன்ஜிசியில்

ஓஎன்ஜிசியில்

ஓஎன்ஜிசி நிறுவனத்தில் ரூ. 21,000 கோடி, ஏக்ஸிஸ் வங்கியில் ரூ. 16,000 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது.

இன்போசிஸ்

இன்போசிஸ்

இன்போசிஸ் நிறுவனத்தில் ரூ. 11,295 கோடியும், டிசிஎஸ்ஸில் ரூ. 11,321 கோடியையும் எல்ஐசி முதலீடு செய்துள்ளதாம்.

English summary
LIC has invested Rs 38,000 in ITC, the leading cigarette maker of the country.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X