For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.3.50 உயர்கிறது?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

LPG price may go up by Rs 3.50 per cylinder
டெல்லி: வீட்டு உபயோகத்துக்கான சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 3 ரூபாய் 50 காசுகள் உயரும் எனத் தெரிகிறது.

விநியோகஸ்தர்களுக்கு அளிக்கப்படும் கமிஷனை சிலிண்டருக்கு 3 ரூபாய் 46 காசுகள் உயர்த்துமாறு மத்திய அரசுக்கு பெட்ரோலிய அமைச்சக ஆய்வுக் குழு பரிந்துரை செய்துள்ளது.

அதை அரசு ஏற்கும் நிலையில், இன்னும் சில தினங்களில் சிலிண்டர் விலை உயரும் என டெல்லியில் பெட்ரோலிய அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ சிலிண்டர் சென்னையில் ரூ.398 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. டெல்லியில் 14.2 கிலோ சிலிண்டர் தற்போது ரூ. 410.50 வாக உள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கடைசியாக வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் ரூ.3.50 உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

5கிலோ சிலிண்டருக்கு 1ரூபாய் 73 பைசா உயர்த்துமாறு ஆய்வுக்குழு பரிந்துரை செய்துள்ளது. தற்போது 5கிலோ சிலிண்டர் ரூ.353க்கு டெல்லியில் விற்பனை செய்யப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

English summary
Domestic cooking gas (LPG) rates may soon go up by almost Rs 3.50 per cylinder in case the government accepts a recommendation for increasing the commission paid to dealers by over 9 per cent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X