For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நிரந்தர கழிவு மற்றும் நீண்டகால மூலதன ஆதாயவரி விதிப்பு ஏப்ரல் 1 முதல் அமல்

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நீண்டகால மூலதன ஆதாயவரி, நிரந்தர கழிவு போன்ற விதிகள் மீண்டும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலாகிறது.

Google Oneindia Tamil News

டெல்லி: பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்ட, நீண்டகால மூலதன ஆதாயவரி, நிரந்தர கழிவு போன்ற விதிகள் மீண்டும் ஏப்ரல் 1ம் தேதி முதல் திரும்பவும் அமல்படுத்தப்படவுள்ளது.

2018-19ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் கடந்த பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் குறிப்பிடத்தக்க அம்சமாக மாதச் சம்பளம் வாங்குவோரின் வீட்டு பட்ஜெட்டை பதம் பார்க்கும் முக்கிய அம்சமான மருத்துவ செலவுக்கு வழங்கும் சலுகையான 15000 ரூபாய் மற்றும் போக்குவரத்து படிக்கு வழங்கும் சலுகையான 19200 ரூபாய் ஆகிய இரண்டையும் நீக்கி விட்டதுதான்.

மாதச் சம்பளம் வாங்குவோர் அனைவரின் எதிர்பார்ப்பே வருமான வரிக்கான குறைந்த பட்ச வரம்பான 2.5 லட்சத்தை 5 லட்சமாக உயர்த்தவேண்டும் என்பதே. அத்துடன் 80சி பிரிவின் கீழ் வழங்கும் சலுகையான 1.50 லட்சத்தையும் குறைந்த பட்சம் 2 லட்சமாக உயர்த்தவேண்டும் என்பதே. நிதி அமைச்சர் ஜெட்லியும் மாதச் சம்பளம் வாங்குவோரின் ஏக்கத்தை பூர்த்தி செய்வோம் என்று உறுதி அளித்திருந்தார்.

நிரந்தர கழிவு

நிரந்தர கழிவு

அதற்கு மாறாக பட்ஜெட் அறிவிப்பில் 80சி பிரிவின் கீழ் கூடுலாக எந்த சலுகையும் வழங்கவில்லை. வருமான வரிக்கான குறைந்தபட்ச வரம்பையும் உயர்த்தவில்லை. பட்ஜெட் அறிவிப்பில் 14 ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்ட LTCG என்னும் நீண்டகால மூலதன ஆதாய வரி மற்றும் நிரந்தரக் கழிவு (Standard Deduction) என்னும் பழைய திட்டங்களை தூசி தட்டி புதிததாக அமல்படுத்தியதுதான்.

10 சதவிகிதம் வரி

10 சதவிகிதம் வரி

எல்டிசிஜி விதியின் கீழ் 2018-19ம் நிதி ஆண்டு முதல் ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட நீண்டகால முதலீடுகளில் இருந்து 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக திரும்ப எடுக்கும் தொகைக்கு 10 சதவிகிதம் வரி விதிக்கப்படும் என்று தெரிவித்தார்.

ரூ.40ஆயிரம் வரிக்கழிவு

ரூ.40ஆயிரம் வரிக்கழிவு

பட்ஜெட்டில் மற்றொரு முக்கிய அம்சமாக நிரந்தரக் கழிவு (Standard Deduction) என்னும் 12 ஆண்டுகளுக்கு முன்பு கைவிடப்பட்ட சலுகையை மீண்டும் அறிமுகப்படுத்தியதுதான். இதன்மூலம் மாதச் சம்பளதார்கள் வருமான வரிச்சலுகையாக 40000 ரூபாயை கழித்துக் கொள்ளலாம் என்பதுதான். இந்த நிரந்தரக் கழிவு சலுகையை பெற எந்தவிதமான ஆவணங்களையும் தாக்கல் செய்யவேண்டியது இல்லை என்பதுதான் மாதச் சம்பளதாரர்களுக்கு கிடைத்த ஒரே சலுகையாகும்.

கார்ப்பரேட் நிறுவனங்கள்

கார்ப்பரேட் நிறுவனங்கள்

ஒரு பக்கம் மாதச் சம்பளம் வாங்குபவர்களுக்கு சலுகையை பறித்துவிட்டு, மற்றொரு பக்கம் வருமான வரி செலுத்துவதில் குறைவான பங்களிப்பை அளிக்கும் தொழில் நிறுவனங்களுக்கு சலுகையை அதிகரித்ததுததான். ஆண்டிற்கு 250 போடி ரூபாய்க்கும் குறைவான விற்றுமுதலை (Annual Turnover) கொண்டுள்ள நிறுவனங்களுக்கு நிறுவன வரியை (Corporate Tax) 25 சதவிகிமாக குறைத்தது அறிவித்தார்

சலுகை உயர்வு

சலுகை உயர்வு

தவிர, பட்ஜெட்டில் மூத்த குடிமக்களுக்கு வருமான வரிச்சட்டம் விதி 80டி பிரிவின் கீழ் தற்போது வழங்கிவரும் மருத்துவச் சலுகையான 30000 ரூபாயை 50000 ரூபாயாக உயர்த்தியதுதான். அதுபோலவே, மிக மூத்த குடிமக்களுக்கு தற்போது அமலில் இருக்கும் சலுகையான 60000 ரூபாய்க்கு பதிலாக 80000 ரூபாயாக உயர்த்தி அறிவித்ததுதான்.

வருமான வரிச்சட்டம்

வருமான வரிச்சட்டம்

ஆகவே, மாதச் சம்பளம் வாங்குவோர் வரும் 2018-19ம் நிதியாண்டு முதல் தங்களின் முதலீட்டுத் திட்டங்களையும் வரிச்சலுகைக்கான திட்டங்களையும் புதிய வருமான வரிச் சட்டங்களுக்கு ஏற்ப மாற்றி அமைத்து செயல்படுத்தினால் மட்டுமே எதிர்பார்க்கும் பலன் கிடைக்கும் என்பது நிச்சயம்.

English summary
LTCG Tax, Standard Deduction and Corporate Tax rules to kick in from April 1
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X