ஈக்விட்டி முதலீட்டாளர்களை பதம் பார்க்கும் நீண்டகால மூலதன ஆதாயவரி

By: V SUBRAMANIAN
Subscribe to Oneindia Tamil

டெல்லி: நீண்டகால வருமானத்தை எதிர்நோக்கி பங்குச் சந்தையிலும், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளிலும் முதலீடு செய்தவர்களின் லாபத்தை பதம் பார்க்கும் விதமாகவே நீண்டகால மூலதன ஆதாயவரி திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக பங்குச் சந்தை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பங்குச் சந்தையிலும், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளிலும்(Equity linkied Mutual Fund) பதினைந்து அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கு மொத்தமாகவோக அல்லது தவணை முறையிலோ (SIP) முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில்தான் பெரும்பாலானவர்கள் தங்களிடம் உள்ள பணத்தை போட்டு வைக்கின்றனர்.


இதற்கு கூட்டு வட்டி (Cumulative Interest) அடிப்படையில் ஆண்டிற்கு குறைந்த பட்சம் 12 சதவிகிதம் முதல் 20 சதவிதிம் வரையிலும் வருவாய் கிடைப்பதுண்டு.

ஒரு வருட காலத்திற்கும் மேற்பட்ட காலத்திற்கு பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளிலும், மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களிலும் முதலீடு செய்தால் இதற்கு வருமான வரி பிடித்தம் கிடையாது என்பதால் தான் அனேகம் பேர் இந்த முதலீட்டை தேர்வு செய்கின்றனர். இந்த வகை முதலீடுகளுக்கு கடந்த 2004ம் ஆண்டு வரையிலும் 10 சதவிகிதம் வரி பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. பின்னர் ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட நீண்டகால முதலீடுகளுக்கு வரி பிடித்தம் செய்வது ரத்து செய்யப்பட்டது.

சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2018-19ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் வரும் ஏப்ரல் மாதம் முதல் ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட காலத்திற்கு பங்குச் சந்தையிலும், பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களிலும் செய்துள்ள முதலுடுகளிலிருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமான முதலீடுகளை விற்கும்போது, அதற்கு 10 சதவிகிதம் வரி பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதே சமயத்தில் கடன் சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்பவர்களுக்கு பழைய நிலையே தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டது.

நிதி அமைச்சர் அருண் ஜெட்லியின் இந்த அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த முதலீட்டாளர்கள் தங்களின் முதலீடுகளை விற்றுவிட்டு சந்தையிலிருந்து வெளியேறுகின்றனர். குறிப்பாக வரும் மார்ச் மாத இறுதிக்குள் நீண்டகால முதலீடுகளை விற்றால், அதற்கு 10 சதவிகித வரி விதிக்கப்படமாட்டாது என்பதால் இப்பொழுது முதலே சிறுக சிறுக விற்று வருகின்றனர். இதனால் பங்குச் சந்தையும் தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வந்தது.

வரும் ஏப்ரல் முதலே, அநேக முதலீட்டாளர்கள் நீண்ட கால முதலீடுகளை தவிர்த்துவிட்டு குறுகிய கால திட்டங்களை தேர்வு செய்து முதலீடு செய்யக்கூடும். அல்லது கடன் சார்ந்த திட்டங்களில் குறுகிய காலத்திற்கு முதலீடு செய்வதற்கும் வாய்ப்பு உள்ளது. இதனால், பங்குச் சந்தையில் புதிய முதலீட்டாளர்களின் வருகை தடைபடும்.

இது பற்றி விளக்கமளித்த பிரபல வெல்த்லேடர் நிதி திட்ட நிறுவன வரி ஆலோசகர் எஸ்.ஸ்ரீதரன், அனைத்து முதலீட்டாளர்களும் நீண்டகால மூலதன ஆதாய வரி என்ன என்பதை தெளிவாக புரிந்துகொள்ளவேண்டியது அவசியமாகும். எல்டிஸிஜி (LTCG) என்பது முழுக்க முழுக்க பங்குச் சந்தை மற்றும் பங்குச் சந்தை சார்ந்த மியூச்சுவல் ஃபண்டு திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும். இவற்றில் ஒரு வருடத்திற்கும் மேற்பட்ட காலத்திற்கு செய்துள்ள முதலீடுகளில் இருந்து ஒரு லட்சத்திற்கம் மேற்பட்ட தொகையை விற்கும்போது எல்டிஸிஜி வரி பிடித்தம் செய்யப்படும்.

அதே சமயத்தில் கடன் சார்ந்த திட்டங்களில் செய்துள்ள முதலீடுகளில் இருந்து பணத்தை திரும்ப எடுக்கும்போது பழைய முறைப்படியே 20 சதவிகித வரியே பிடித்தம் செய்யப்படும், என்று விளக்கமளித்தார்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
The long term capital gain tax rule will appear only equity related mutual funds investments. But, at the same time debt funds, short term capital gains are taxed as per the individual’s tax slab.

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற