For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றிய மலேசிய பிரதமர் - ஜூன் 1 முதல் ஜிஎஸ்டி ரத்து

மலேசியாவில் ஏற்கனவே இருந்த விற்பனை மற்றும் சேவை வரி கடந்த 2015 ஆம் ஆண்டு மாற்றப்பட்டு புதியதாக சரக்கு சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டது. ஜூன் 1 இந்த ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்படும்

Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: மலேசிய அரசு சரக்கு மற்றும் சேவை வரியை ரத்து செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறது. வரும் ஜூன் 1ஆம் தேதி முதல் இந்த வரி ரத்து செய்யபடுகிறது. மீண்டும் எஸ்.எஸ்.டி. என்ற பழைய வரி முறையே அமுலில் இருக்கும் என மலேசியாவில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டது. மலேசியாவில் ஏற்கனவே இருந்த விற்பனை மற்றும் சேவை வரி கடந்த 2015 ஆம் ஆண்டு

மாற்றப்பட்டு புதியதாக சரக்கு சேவை வரி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த வரி முறையில் பல்வேறு குழப்பங்களும், சிக்கல்களும் இருந்ததால் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனாலும் அரசு எதனையும் கண்டு கொள்ளாமல் செயல்படுத்தி வந்தது.

Malaysia to remove GST for consumers on Jun 1

இந்நிலையில் தேர்தல் பிரசாரத்தின் போது பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கட்சி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஜி.எஸ்.டி. வரியை ரத்து செய்வோம் என்று அறிவித்தது. அதன்படி அந்த கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.

மகாதீர் முகமது பிரதமராக கடந்த சில தினங்களுக்கு முன்பு பதவி ஏற்றுக் கொண்டார். பதவியேற்ற மாதீர் முகமது உடனடியாக ஜி.எஸ்.டி. வரி ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டார். மீண்டும் எஸ்.எஸ்.டி. என்ற பழைய வரி முறையே அமுலில் இருக்கும் என புதிய பிரதமர் அறிவித்துள்ளார்.

கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் லாபம் பெறும் நாடுகளில் மலேசியாவும் ஒன்று என்பதால் இந்த வருமான இழப்பை ஈடு செய்ய முடியும் என சந்தை வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

மலேசியாவில் சமீபத்தில் பொதுத்தேர்தல் முடிந்து மகாதீர் முகமது பிரதமரானார். தேர்தலில் வெற்றிபெற்றால் சரக்கு மற்றும் சேவை வரியை நீக்குவதாக அவர் வாக்குறுதி அளித்திருந்தார். அதனை தொடர்ந்து பிரதமராக பொறுப்பேற்ற இவர் ஜிஎஸ்டியை நீக்குவதாக அறிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி மலேசிய மக்களிடையே அதிருப்தியையும், வேலை இழப்புகளையும் உருவாக்கியது. மலேசியாவின் வருமானத்தில், வருமான வரிக்கு 32% பிறகு சரக்கு மற்றும் சேவை வரியின் பங்கு அதிகமாக 18% மாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சரக்கு மற்றும் சேவை வரியை சரியாக அமல்படுத்தாத நாடுகளில் மலேசியாவும் ஒன்று. இந்த முறையை நீக்க கோடிக்கணக்கான மக்கள் போராடிய நாட்களும் உண்டு.

மோசமாக அமல்படுத்தபட்டதன் காரணமாகவே இந்த முறை நீக்கப்பட்டிருக்கிறது. தவிர தேர்தல் வாக்குறுதி என்பதாலும் நீக்கப்பட்டிருக்கிறது என்றார். ஜிஎஸ்டியை நீக்க வேண்டும் என்னும் முடிவு ஏற்கெனவே அறிவிகப்பட்டதுதான். அதில் இருந்து பின் வாங்கும் திட்டம் ஏதும் இல்லை என மலேசிய அரசின் ஆலோசகர் அறிவித்துள்ளார்.

English summary
Malaysia's finance ministry said on Wednesday (May 16) that the 6 per cent Goods and Services Tax (GST) will be zero-rated from Jun 1, effectively abolishing it until further notice.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X