For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாலு போயி கத்தி வந்தது டும் டும் டும்... இதுதான் வேலை வாய்ப்பு சர்வே!

Google Oneindia Tamil News

டெல்லி: தொழில் துறையான உற்பத்தித் துறையில் வேலை வாய்ப்பு கடுமையாக சரிவடைந்துள்ளது தெரியவந்துள்ளது. இத்துறையானது நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் சுமார் 87000 வேலைவாய்ப்புகளை இழந்துள்ளது.

நாட்டின் வேலைவாய்ப்பு பற்றிய புள்ளி விவர ஆய்வறிக்கையை ஒவ்வொரு காலாண்டிற்கும் மத்திய தொழிலாளர் நலத்துறையின் கீழ் உள்ள தொழிலாளர் பணியகம் (Labour Bureau's) வெளியிடும்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி முக்கிய துறைகளான (Core Sectors) கல்வி, சுகாதாரம், தொழில் துறை, வர்த்தகம், போக்குவரத்து, விருந்தோமல் துறையான ஹோட்டல் மேனேஜ்மென்ட், தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் கட்டுமானத் துறை ஆகிய எட்டு துறைகளில் ஒட்டு மொத்தமாக சுமார் 64000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

வேலை வாய்ப்புகள்

வேலை வாய்ப்புகள்

கல்வி மற்றும் சுகாதாரத் துறையில் (Education and Health Sector) நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான முதல் காலாண்டில் சுமார் 1.30 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. கல்வித் துறையில் மட்டும் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் சுமார் 99000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. சுகாதாரத்துறையில் சுமார் 31000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சரிவடைந்த வேலை வாய்ப்பு

சரிவடைந்த வேலை வாய்ப்பு

அதே சமயத்தில் தொழில் துறையான உற்பத்தித் துறையில் (Manufacturing Sector) வேலை வாய்ப்பு கடுமையாக சரிவடைந்துள்ளது தெரியவந்துள்ளது. இத்துறையானது நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் சுமார் 87000 வேலைவாய்ப்புகளை இழந்துள்ளது.

தகவல் தொழில் நுட்பம்

தகவல் தொழில் நுட்பம்

ஒட்டுமொத்தமாக கல்வி மற்றும் சுகாதாரம் தவிர்த்து, உற்பத்தி, கட்டுமானம், போக்குவரத்து, ஹோட்டல், வர்த்தகம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய ஆறு துறைகளும் சுமார் 66000 வேலை வாய்ப்புகளை இழந்துள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

66000 வேலை வாய்ப்புகள்

66000 வேலை வாய்ப்புகள்

கல்வி, சுகாதாரம் தவிர்த்து மற்ற ஆறு முக்கிய துறைகளான தொழில்துறை, கட்டுமானம், தகவல் தொழில்நுட்பம், போக்குவரத்து, வர்த்தகம் மற்றும் ஹோட்டல் ஆகிய துறைகள் ஒட்டுமொத்தமாக ஏப்ரல்-ஜூன் காலாண்டில் சுமார் 66000 வேலைவாய்ப்புகளை இழந்துள்ளது தெரியவந்துள்ளது.

1.8 சதவிகித வேலை வாய்ப்புகள்

1.8 சதவிகித வேலை வாய்ப்புகள்

கடந்த 2016ம் நிதி ஆண்டு முதல் இந்த எட்டு துறைகளிலும் சுமார் 4.80 லட்சம் வேலை வாய்ப்புகள் கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளது. இதன் வளர்ச்சியானது கடந்த ஐந்து காலாண்டுகளில் சுமார் 2.3 சதவிகித வளர்ச்சியாகும். ஒரு ஆண்டின் சராசரி வளர்ச்சியாக பார்த்தால் சுமார் 1.8 சதவிகிதம் மட்டுமே ஆகும். ஒவ்வொரு ஆண்டும் படிப்பை முடித்துவிட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வோரின் எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் மலைக்க வைக்கும் வகையில் சராசரி விகிதமானது எட்டாத அளவில் உள்ளது.

English summary
Manufacturing sector lost 87000 jobs in April-June education and health sector job
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X