For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோடிகளில் வருவாய் ஈட்டும் எம்எல்ஏக்கள் ஆண்டு சராசரி வருமானம் ரூ.24.59 லட்சம்

நாடுமுழுவதும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் ஆண்டு சராசரி வருமானம் ரூ.24.59 லட்சம் என சமீபத்திய ஆய்வில் தெரிய வந்து உள்ளது.

Google Oneindia Tamil News

சென்னை: பட்டதாரி எம்எல்ஏக்களை விட 5 முதல் 8வது வகுப்பு வரை கூட படிக்காத எம்எல்ஏக்களின் வருமானம் அதிகமாக உள்ளது. இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில், எம்.எல்.ஏ.க்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.24.59 லட்சம் என கண்டறியப்பட்டு உள்ளது.

சட்டசபை உறுப்பினர்களுக்கு லட்சக்கணக்கில் சம்பளம் கிடைக்கிறது. இது தவிர பிசினஸ் செய்தும் வருமானம் ஈட்டுகின்றனர். பலர் கல்வி தந்தைகளாகவும் இருக்கின்றனர். இந்த நிலையில் நாடுமுழுவதும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் ஆண்டு சராசரி வருமானம் பற்றி ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

MLAs Declare Average Income of Rs 25 Lakh Per Year

மொத்தம் உள்ள 4086 எம்.எல்.ஏ.க்களில் 3145 பேர் இந்த பிரமாண பத்திரங்களை வழங்கி உள்ளனர். அவற்றை ஆய்வு செய்தபோது பல்வேறு தகவல்கள் கிடைத்தன. அதில் முக்கியமாக, இந்த எம்எல்ஏக்களின் தனிப்பட்ட ஆண்டு வருமானம் குறித்த தகவல்களை அந்த அமைப்புகள் வெளியிட்டு உள்ளன.

நாட்டிலேயே அதிக வருமானம் கர்நாடக மாநில எம்எல்ஏக்களுக்குத்தான். 203 எம்எல்ஏக்கள் சராசரியாக ரூ.1.11 கோடி வருவாய் ஈட்டுகின்றனர். குறைந்தபட்சமாக சட்டீஸ்கர் மாநிலத்தில் 63 எம்எல்ஏக்கள் ஆண்டுக்கு ரூ.5.4 லட்சம் மட்டுமே சம்பாதிக்கின்றனர்.

தென் பிராந்தியத்தை சேர்ந்த 711 எம்எல்ஏகளின் ஆண்டு சராசரி வருமானம் ரூ.51.99 லட்சமாகவும், குறைந்தபட்சமாக கிழக்கு பிராந்தியத்தை சேர்ந்த 614 எம்எல்ஏக்களின் ஆண்டு வருமானம் ரூ.8.53 லட்சமாகவும் இருக்கிறது.

எம்எல்ஏக்களின் கல்வித்தகுதியை பொறுத்தவரை, 1052 பேர் 5 வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான கல்வித்தகுதியை கொண்டுள்ளனர். இவர்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ.31.03 லட்சமாக உள்ளது.

வெறும் 8ஆம் வகுப்பு கல்வித்தகுதி பெற்றுள்ள 139 எம்எல்ஏக்கள் ஆண்டுக்கு சராசரியாக ரூ.89.88 லட்சம் சம்பாதிக்கின்றனர். பட்டதாரி மற்றும் கூடுதல் தகுதியை பெற்றிருக்கும் 1997 எம்எல்ஏக்கள் ரூ.20.87 லட்சம் சம்பாதிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

397 பேர் விவசாயத்தின் மூலம் தங்களுக்கு வருமானம் கிடைப்பதாக கூறியுள்ளனர். ஒரு சதவிகித எம்எல்ஏக்கள் சினிமாவில் நடிப்பதன் மூலமும், பிசினஸ் செய்வதன் மூலமும் வருமானம் கிடைப்பதாக தெரிவித்துள்ளனர். சிலரோ இல்லத்தரசிகளாகவும், வழக்கறிஞர்களாகவும் உள்ளனர்.

எது எப்படியோ சட்டமன்ற உறுப்பினர்களின் சராசரி வருமானம் லட்சக்கணக்கில் உள்ளது. ஓட்டுப்போட்ட சமானிய மக்களின் வருமானம்தான் பெட்ரோல், டீசல் போடவும், வீட்டு பட்ஜெட்டிற்குமே சரியாகி விடுகிறது. மிச்சம் மீதி இருப்பதை பிள்ளைகளின் கல்வி செலவுக்கும், மருத்துவத்திற்கும் செலவழித்து விடுகின்றனர்.

English summary
MLAs across the country have an average annual income of Rs 24.59 lakh, with those from Karnataka topping the charts with an average of over Rs 1 crore per annum, a study showed on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X