For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நாளை முதல் கார், பைக்குகளுக்கான இன்சூரன்ஸ் கட்டணம் உயர்கிறது

By Siva
Google Oneindia Tamil News

டெல்லி: அடுத்த நிதியாண்டில் இருந்து கார், பைக்குகள் உள்ளிட்ட வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் பிரீமியத்தை 40 சதவீதம் வரை உயர்த்த இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் முடிவு செய்துள்ளது.

ஏப்ரல் 1ம் தேதி முதல் கார்கள், இரு சக்கர வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் பிரீமியத்தை 40 சதவீம் வரை உயர்த்த

Motor vehicle insurance to cost more from April as premiums hiked by up to 40 pct

இந்திய காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் தீர்மானித்துள்ளது. 1,000 சிசி வரையிலான சிறிய கார்களுக்கான மூன்றாம் பார்ட்டி மோட்டார் இன்சூரன்ஸ் பிரீமியம் தற்போது ரூ.1,468 ஆக உள்ளது. இந்த பிரீமியம் தொகையை 39.9 சதவீதம் அதிகரித்து ரூ.2,055 ஆக ஆக்கப்படுகிறது.

1,000 முதல் 1,500 சிசி வரையிலான கார்களுக்கான பிரீமியமும் 40 சதவீதம் உயர்த்தப்படுகிறது. 1,500 சிசிக்கு மேற்பட்ட பெரிய கார்கள், எஸ்.யூ.வி.க்களுக்கான பிரீமியம் 25 சதவீதம் உயர்கிறது. ரூ.4,931 ஆக உள்ள பிரீமியம் நாளை முதல் ரூ.6, 164க உயர்கிறது.

பைக்குகள், ஸ்கூட்டர்களுக்கான பிரீமியமும் அதிகரிக்கிறது. 75 சிசி இரண்டு சக்கர வாகனங்களுக்கான பிரீமியம் ரூ.519ல் இருந்து ரூ.569 ஆக அதிகரிக்கிறது. 75 சிசி முதல் 150 சிசி வரையிலான இரு சக்கர வாகனங்களுக்கான பிரீமியம் 15 சதவீதமும், 150 முதல் 350 சிசி வரையிலான இரு சக்கர வாகனங்களுக்கான பிரீமியம் 25 சதவீதமும் உயர்கிறது.

பொது போக்குவரத்து வாகனங்களுக்கான பிரீமியம் 15 முதல் 30 சதவீதம் அதிகரிக்கிறது. அனைத்து வாகனங்களுக்கும் மோட்டார் இன்சூரன்ஸ் கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Insurance of vehicles, including cars and bikes, will become costlier from April 1 as insurance regulator Irdai has decided to increase premiums by up to 40 per cent from the next fiscal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X