For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நம்பர் 1 இந்திய பணக்காரர் முகேஷ் அம்பானி - ஃபோர்ப்ஸ் லிஸ்ட்

இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர் என்ற பெருமையை பதினோறாவது ஆண்டாக முகேஷ் அம்பானி தக்க வைத்துக்கொண்டுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி இந்திய பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்திருக்கிறார். கடந்த 11 ஆண்டுகளாகவும் இவர் தான் முதல் இடத்தில் இருக்கிறார். ஜியோவின் வளர்ச்சிக்குப் பின்னர் இவரின் சொத்து மதிப்புகள் அதிகரித்துள்ளது.

2018ஆம் ஆண்டுக்கான இந்தியாவின் அதிக சொத்து மதிப்பு மிக்க பணக்காரர்களுக்கான பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. அதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவரான முகேஷ் அம்பானி 47.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் இருக்கிறார்.

Mukesh Ambani is wealthiest Indian for 11th year

இந்த ஆண்டில் அதிக சொத்து சேர்த்தவர் என்ற பெருமையையும் முகேஷ் அம்பானி பெற்றுள்ளார். இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோ கண்டு வரும் அதீத வளர்ச்சியால்தான் அம்பானியின் சொத்து அபரிமிதமாக உயர்ந்துள்ளது.

அவர் இந்த ஆண்டில் மொத்தம் 9.3 பில்லியன் டாலரைத் தனது சொத்து மதிப்பில் சேர்த்துள்ளார். முகேஷ் அம்பானி ஏற்கனவே ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் என்ற பட்டியலில் முதலிடம் பிடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

[பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புடின் இன்று சந்திப்பு.. முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிறது!]

சர்வதேச சந்தைகளில் ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்த போதிலும் இந்த பட்டியலில் சுமார் 11 பேர் தங்களின் சொத்து மதிப்பினை 1 பில்லியன் டாலர்கள் வரை அதிகரித்துள்ளனர். இந்த பட்டியலில் ஐந்து நபர்கள் புதிதாக இணைந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ள பட்டியலில் அம்பானியைத் தொடர்ந்து விப்ரோ நிறுவனத் தலைவரான அசிம் பிரேம்ஜி 21 பில்லியன் டாலர் சொத்துடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். அவர் இந்த ஆண்டில் 2 பில்லியன் டாலரைத் தனது சொத்து மதிப்பில் சேர்த்துள்ளார்.

ஏர்செலார் மிட்டல் நிறுவனத் தலைவரான லட்சுமி மிட்டல் 1.8 பில்லியன் டாலரைப் புதிதாகச் சேர்த்து மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அவரது சொத்து மதிப்பு தற்போது 18.3 பில்லியன் டாலராக இருக்கிறது.

ஹிந்துஜா சகோதரர்கள் 18 பில்லியன் டாலர் சொத்துடன் நான்காம் இடத்திலும், பலோஞ்சி மிஸ்ட்ரி 15.7 பில்லியன் டாலர் சொத்துடன் ஐந்தாம் இடத்திலும் இருக்கின்றனர்.

தமிழகத்தைச் சேர்ந்த ஷிவ் நாடார் 14.6 பில்லியன் டாலர் சொத்துடன் ஆறாம் இடத்தில் இருக்கிறார். கோத்ரேஜ் குடும்பம், திலிப் சங்வி, குமார் மங்களம் பிர்லா, கவுதம் அதானி ஆகியோரும் முதல் பத்து இடங்களுக்குள் இருக்கின்றனர்.

100 பேர் கொண்ட பட்டியலில் 4 பெண்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். பயோடெக்னாலஜி துறையில் புகழ்பெற்று விளங்கும் கிரண் மஸும்தர் ஷா. அவரின் சொத்து மதிப்புகள் கடந்த ஒரு வருடத்தில் 66.7% என்ற அளவில் உயர்ந்திருக்கிறது. அவர் இப்பட்டியலில் 39வது இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Reliance Industries Ltd chairman Mukesh Ambani has topped Forbes’s annual list of India’s 100 richest for the eleventh straight year, with a net worth of $47.3 billion. Overall, it was a slow year for the growth of net worth of India’s richest.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X