For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

500 ரூபாய் நோட்டு அச்சடிக்க எவ்வளவு செலவாகிறது தெரியுமா?

பழைய 500 ரூபாய் நோட்டு ஒன்று அச்சடிக்க ரூ.3.09 காசு செலவானது. அதே செலவிலேயே புதிய 500 ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படுகிறது.

By Super Admin
Google Oneindia Tamil News

கறுப்புப் பணம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்காக கடந்த மாதம் 8ஆம் தேதி பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை திரும்ப பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதற்கு பதிலாக புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டு வருகிறது.

500, 1000 ரூபாய் நோட்டுகள் அச்சிட அரசுக்கு ஏற்படும் செலவு குறித்து, மும்பையைச் சேர்ந்த தகவல் உரிமைச் சட்ட ஆர்வலர் அனில் கல்கலி கேள்வி எழுப்பியிருந்தார்.

New Rs 500 note at the old cost of Rs 3.09

இதற்கு, ரிசர்வ் வங்கி உதவி பொது மேலாளர் பி.வில்சன் நேற்று அளித்துள்ள பதிலில், 2016-17ஆம் நிதியாண்டில் ஆயிரம் தாள்கள் கொண்ட ரூ.500 நோட்டுக் கட்டின் விற்பனை விலை ரூ.3,090 என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அனில் கல்கலி கூறும்போது, ரூபாய் நோட்டு களை பாரதிய ரிசர்வ் பேங்க் நோட் முத்ரான் பிரைவேட் லிமிடெட் (பிஆர்பிஎன்எம்பிஎல்) என்ற நிறு வனம் அச்சிடுகிறது. இந்த நிறுவனத்திடம் இருந்தே ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி வாங்குகிறது.

இதே போல் 1000 ரூபாய் நோட்டு ஒன்று அச்சடிக்க அரசுக்கு ரூ.3.54 செலவானது. அதே செலவில் தற்போது புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகிறது என்று மத்தியப் பிரதேச மாநிலம் நீமச் என்ற பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவர் கேட்டிருந்த கேள்விக்கு பாரத ரிசர்வ் வங்கி ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் நிறுவனம் அளித்துள்ள பதிலில் கூறியுள்ளது.

500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நிலையில், புதிய ரூ.500 நோட்டுகள் இதுவரை எவ்வளவு அச்சிடப்பட்டுள்ளது போன்ற விவரங்களை அரசு தெரிவிக்காதது வியப்பாக உள்ளது என அனில் கல்கலி தெரிவித்தார்.

English summary
Bhartiya Reserve Bank Note Mudran Private Limited (BRBNMPL) is printing each new Rs 500 note at the old cost of Rs 3.09, while the cost of Rs 2,000 currency note is Rs 3.54.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X