For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடேங்கப்பா... டோல் கேட் கட்டணம் ரூ.22,820.58 கோடி வசூல் - தமிழ்நாட்டில் ரூ.2,378.69 கோடி

இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணங்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

Google Oneindia Tamil News

சென்னை: 2017-18 நிதியாண்டில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் மொத்தம் ரூ.22,820.58 கோடி சுங்கக் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 2017-18 நிதியாண்டில் சுங்கக் கட்டணமாக ரூ.2,378.69 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்படும் சுங்கக் கட்டணங்கள் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தமிழகத்தில் மட்டும் 2017-18 நிதியாண்டில் சுங்கக் கட்டணமாக ரூ.2,378.69 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

NHAI collects Rs 22.820.58 crore in toll revenue

ஜூலை 19ஆம் தேதி லோக்சபாவில் கேள்வி நேரத்தின் போது இதுகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை மற்றும் கப்பல் துறை இணையமைச்சரான மன்சுக் எல்.மாண்டவியா எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:

சென்ற 2017-18 நிதியாண்டில் இந்திய தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் மொத்தம் ரூ.22,820.58 கோடி சுங்கக் கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய 2016-17 நிதியாண்டில் ரூ.18893.27 கோடியும், 2015-16 நிதியாண்டில் ரூ.18148.75 கோடியும் வசூலிக்கப்பட்டிருந்தது.

2017-18இல் அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.3276.36 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் ரூ.2708.61 கோடி வசூலாகியுள்ளது.குறைந்தபட்சமாக உத்தராகண்டில் ரூ.19.06 கோடி வசூலாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மத்திய அரசு சார்பில் தேசிய நெடுஞ்சாலைகளில் 461 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், தமிழகத்தில் 42 சுங்கச் சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 2017-18 நிதியாண்டில் ரூ.2378.69 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. அதற்கு முந்தைய 2016-17 நிதியாண்டில் ரூ.2075.02 கோடியும், 2015-16 நிதியாண்டில் ரூ.1958.93 கோடியும் தமிழகத்தில் வசூலிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Toll gate collection on National Highways has shown a rising trend. Rajasthan tops the list of states that reported high revenue collection through toll collection on national highways, having recovered Rs. 3276.36 cr through tolls on national highways passing through the state during financial year 2017-18. With revenue collection of Rs. 2708.61 crore Maharashtra came second in terms of toll collection, an official release read.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X