For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரூ. 14.5லட்சம் கோடி செல்லாத நோட்டுக்கள் டெபாசிட் - ரிசர்வ் வங்கி

செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் டிசம்பர் மாதம் 30ஆம் தேதி வரையில் ரூ.14.5 லட்சம் கோடி (94%)வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி கூறியுள்ளது

By Lekhaka
Google Oneindia Tamil News

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நோக்கத்தில் கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி புழக்கத்தில் இருந்த உயர்மதிப்பு நோட்டுகளான ரூ.500மற்றும் ரூ.1000 ஆகியவற்றை செல்லாதவைகளாக பிரதமர் மோடி அறிவித்தார்.

செல்லாத நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக்கொள்ள கெடு அளிக்கப்பட்டது. தினசரியும் 4,500ரூபாய் வரை மாற்றித்தரப்பட்டது. பின்னர் அது ரூ. 2000 ஆக குறைக்கப்பட்டது. பணத்தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் புதிய வடிவிலான ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சிட்டு வங்கிகள் மூலமாக விநியோகித்து வருகிறது.

Note ban: Rs 14.5 lakh cr old notes deposited in banks

இந்நோட்டுகளை டிசம்பர் 30ஆம் தேதிக்குள் வங்கிகளில் டெபாசிட் செய்தாக வேண்டும் என்று காலக்கெடுவும் விதிக்கப்பட்டிருந்தது. ரிசர்வ் வங்கியின் மதிப்பீட்டின்படி, கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி நிலவரப்படி, புழக்கத்தில் இருந்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளின் மதிப்பு ரூ.15.44 லட்சம் கோடியாகும்.

இந்நிலையில் இந்நோட்டுகள் மதிப்பிழந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர் நவம்பர்9ஆம் தேதியிலிருந்து டிசம்பர்ம் 30ஆம் தேதி வரையில் ரூ.14.5 லட்சம் கோடி வங்கிக் கணக்குக்கு வந்துள்ளது. எனவே மதிப்பிழந்த ஒட்டுமொத்த ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகளில் 94 சதவிகித நோட்டுகள் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன.

டெபாசிட் செய்யப்படாத நோட்டுகள் கறுப்புப் பணமாக பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம். அல்லது அவை ரிசர்வ் வங்கிகளில் செலுத்தப்படலாம். மேலும், நவம்பர் 9 முதல் டிசம்பர் 30வரையில் வெளிநாட்டில் வசித்துவந்தவர்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்கள் மதிப்பிழந்த நோட்டுகளை செலுத்த, மார்ச் 31வரையில் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே 94 சதவிகிதம் என்பது அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

English summary
Banks have witnessed exchange and deposits of old high denomination Rs 500 and Rs 1,000 notes worth Rs Rs.14.50 crore until 30 December, the RBI said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X