For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காய்கறிகள் விலை உயர்வு... சில்லறை பணவீக்க விகிதம் அதிகரிக்க வாய்ப்பு- ஆய்வு

நவம்பர் மாதத்திய சில்லறை பணவீக்க விகிதம் 4 சதவிகிதத்தை தாண்டும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: காய்கறிகள், தானியங்கள் மற்றும் எண்ணை ஆகியவற்றின் விலை உயர்வால் நவம்பர் மாதத்திய சில்லறை பணவீக்க விகிதம் 4 சதவிகிதத்தை தாண்டும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட பின்பு சில்லறை பணவீக்க விகிதம் சீராக அதிகரித்து வருகிறது.

கடந்த அக்டோபர் மாதத்திலேயே ஏழு மாத உச்சத்தை தொட்டது சில்லறை பணவீக்கம்.


வடகிழக்குப் பருவமழை

வடகிழக்குப் பருவமழை

தற்போது வடகிழக்கு பருவமழைக்காலம் என்பதால் காய்கறிகள், தானியங்கள் மற்றும் எண்ணை வித்துக்களின் விலைச்சல் குறைவாக இருக்கும் என்பதாலும் காய்கறிகளின் விலை உச்சசத்திலேயே இருக்கும். இந்த விலை ஏற்றமானது வரும் டிசம்பர் மாதம் வரையிலும் நீடிக்கக்கூடும்.

பணவீக்க விகிதம்

பணவீக்க விகிதம்

கூடவே சர்வதேச அளவில் கச்சா எண்ணையின் விலையும் இரண்டு வருட உச்சத்தில் வர்த்தகமாகி வருகின்றது. தற்போது ஒரு பேரல் கச்சா எண்ணையின் விலை 57 டாலாருக்கு விற்பனையாகி வருகின்றது. இதுவும் சில்லறை பணவீக்க விகிதம் உயர ஒரு காரணமாகும்.

வெங்காயம் இறக்குமதி

வெங்காயம் இறக்குமதி

விலை உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசானது பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக வெங்காயத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து விலை ஏற்றத்தை தடுக்க முயற்கி மேற்கொண்டுவருகிறது.

பணவீக்கம்

பணவீக்கம்

சில்லறை பணவீக்க விகிதத்தே கட்டுப்படுத்தும் ஒரு அம்சமாகவே, தற்போது மத்திய அரசானது, பெரும்பாலான நுகர்பொருட்களின் ஜிஎஸ்டி வரியை 28 சதவிகிதத்தில் இருந்து 5 முதல் 18 சதவிகிமாக குறைத்துவிட்டது.

 28%ஜிஎஸ்டி குறைப்பு

28%ஜிஎஸ்டி குறைப்பு

வெகுஜன மக்கள் பயன்படுத்தும் பெரும்பாலான நுகர்பொருட்களின் வரியை சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பு முறை அமல்படுத்தப்பட்ட புதிதில் உச்சபட்ச வரிவிதிப்பான 28 சதவிகிதமாக அமல்படுத்தி இருந்தது.

 அத்தியாவசிய பொருட்கள்

அத்தியாவசிய பொருட்கள்

இதனால், நுகர்பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் உற்பத்தியானது கடந்த ஜூலை மாதத்திலிருந்து சரியத்தொடங்கியது. இதனை உணர்ந்தோ என்னவோ மத்திய அரசானது நுகர்பொருட்களின் ஜிஎஸ்டி வரியை தடாலடியாக 28 சதவிகிதத்தில் இருந்து 18 முதல் 5 சதவிகிமாக குறைத்துவிட்டது.

4.5%மாக அதிகரிக்கும் பணவீக்கம்

4.5%மாக அதிகரிக்கும் பணவீக்கம்

சர்வதேச நிதிச் சேவைகள் நிறுவனமான மார்கன் ஸ்டேன்லி, வரும் மாதங்களில் காய்கறிகள் மற்றும் எண்ணை வித்துக்களின் விலையானது கணிசமாக உயரும் என்று கணித்துள்ளது. காய்கறிகளின் தொடர்ச்சியான விலை ஏற்றம் மற்றும் கச்சா எண்ணை போன்றவற்றின் காரணமாக நவம்பர் மாதத்திய சில்லறை பணவீக்க விகமானது 4.5 தொடக்கூடும் என்று தன்னுடைய ஆய்வில் தெரிவித்துள்ளது.

கணிசமாக உயரும்

கணிசமாக உயரும்

மற்றொரு ஆய்வு நிறுவனமான நொமுரா, தன்னுடைய ஆய்வில் வரும் மாதங்களில் சில்லறை பணவீக்க விகிமானது கணிசமாக உயரும் என்றும் நவம்பர் மாதத்திய சில்லறை பணவீக்க விகிதமானது 4 சதவிகிதத்தை தாண்டக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. தற்போது மத்திய அரசு அறிவித்துள்ள பெரும்பாலான நுகர்பொருட்களின் ஜிஎஸ்டி வரி குறைப்பு நடவடிக்கையால் வெகுஜனமக்களுக்கு சிறிய நிவாரணமாக இருக்கக்கூடும்.

English summary
November Retail inflation will cross 4 % and above-Morgan Stanley
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X