For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொடர்ந்து உயரும் வெங்காய விலை!! சரிந்தது சிக்கன் விலை!

Google Oneindia Tamil News

திருநெல்வேலி: வெங்காய விலை தற்போது கிலோ ரூ100 வரை உயர்ந்துவிட்டது. ஆனால் சிக்கன் விலையோ சற்று சரிவை கண்டிருக்கிறது.

தமிழர்களின் அன்றாட உணவில் வெங்காயத்துக்கு தனி இடம் உண்டு. சின்ன வெங்காயம் முதல் பல்லாரி வரை அனைத்தையும் மக்கள் தினந்தோறும் பயன்படுத்த தவறுவது இல்லை. ஆனால் இவற்றின் விலை தங்கத்துக்கு நிகராக உயர்ந்து வருவதால் பொதுமக்கள் திணறி போய் உள்ளனர்.

கடந்த சில வாரங்களாக கிலோ ரூ.50க்கு வி்ற்பனை செய்யப்பட்ட வெங்காயம் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. தீபாவளிக்கு வெங்காயத்தி்ன் பயன்பாடு அதிகமாக இருக்கும் என்பதால் அவற்றின் விலை உயர்ந்தது பற்றி மக்கள் கவலைப்படவில்லை.

தீபாவளிக்குப் பின்னரும்..

தீபாவளிக்குப் பின்னரும்..

ஆனால் தீபாவளி முடிந்த பின்னரும் அவற்றின் விலை குறையவில்லை. இதனால் அனைத்து தரப்பினரும் என்ன செய்வது என தெரியாமல் திகைத்து போய் உள்ளனர்.

சின்ன வெங்காயம் ரூ100

சின்ன வெங்காயம் ரூ100

சின்ன வெங்காயம் கடந்த சனிக்கிழமை ரூ.90க்கு விற்கப்பட்டது. ஆனால் நேற்று அவை மேலும் உயர்ந்து ரூ.100ஐ தொட்டது.

வாங்காமல் திரும்பிய மக்கள்

வாங்காமல் திரும்பிய மக்கள்

நெல்லை டவுன் சந்தையில் முதல் தர வெங்காயம் ரூ.100க்கு விற்கப்பட்டது. இதனால் விலையை கேட்க பலர் திகைத்து போய் வாங்காமல் திரும்பி சென்றதை பார்க்க வேதனையாக இருந்தது.

பெரிய வெங்காயம் விலை குறைவு

பெரிய வெங்காயம் விலை குறைவு

மொத்த விற்பனையில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.80 முதல் 85 வரை விற்கப்பட்டது. ஆனால் பெரிய வெங்காயம் ரூ.45 ஆக குறைந்து விற்கப்பட்டது. சில்லரை விற்பனை ரூ.60 ஆக விற்கப்பட்டது.

மழை குறையனும்..

மழை குறையனும்..

இதுகுறித்து வியாபாரிகள் சிலர் கூறுகையில் வெங்காயம் வரத்து இப்போது பரவாயில்லை. இன்னும் ஒரு வாரம் மழை பெய்யாமல் இருந்தால் வெங்காய வரத்து மேலும் அதிகரிக்கும். அப்போது மேலும் விலை குறையும். ஆனால் தற்போது மழை அவ்வப்போது பெய்து வருவதால் விலை குறைய வாயப்பில்லை என்றனர்.

சிக்கன் விலை சற்று குறைவு

சிக்கன் விலை சற்று குறைவு

ஆனால் இதற்கு நேர் மாறாக சிக்கன் விலை சற்று குறைந்து ஒரு கிலோ ரூ.80 ஆக வி்ற்கப்படுகிறது. ஆனாலும் வெங்காயம் இல்லாமல் சிக்கனை வாங்கி பிரயோஜனமில்லை என்கின்றனர் பொதுமக்கள்.

English summary
Onion prices continued to rule at a record Rs 100 per kg in Nellai Town.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X