For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆன்லைன் ஷாப்பிங்- தீபாவளிக்கு கடை கடையாய் ஏறி இறங்கிய காலம் மலையேறிப் போச்சு

தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது. ஆன்லைனில் பட்டாசு, பலகாரம், ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்களை ஆஃபரில் வாங்கி குவிக்கின்றனர்.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: பண்டிகை வந்தாலே 15 நாட்களுக்கு முன்பிருந்தே கடை வீதிக்கு போய் பொருட்களை தொட்டு, தடவி, சுவைத்து பார்த்து வாங்கிய காலம் மலையேறி வருகிறது. இப்போது அங்கே இங்கே அலையாமல் விரல் நுனியில் பொருட்களை வாங்கி குவித்து வருகின்றனர்.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் வேளையில் பல்வேறு ஆன்லைன் ஷாப்பிங் தளங்கள் பம்பர் ஆஃபர்களை வழங்கி வருகின்றன.

பண்டிகைக் காலம் தொடங்கிவிட்டதால், மொபைல் போன்கள், மின்னணு சாதனங்கள், நுகர்வோர் பொருட்கள், ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவற்றை வாங்க ஆன்லைன் வாடிக்கையாளர்கள் சுமார் 30,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையைச் செலவிட வாய்ப்புள்ளதாக அசோசம் அமைப்பு தெரிவித்துள்ளது.

வீட்டு உபயோகப் பொருட்கள்

வீட்டு உபயோகப் பொருட்கள்

தீபாவளி, கிறிஸ்துமஸ் என தொடர்ந்து பண்டிகை வருவதால் ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தள்ளுபடிகளை அறிவிக்கின்றன. வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களும், வாகனங்கள் உட்பட எல்லாமே ஆன்லைனில் சலுகை விலையில் கிடைத்து விடுகிறது.

ஆன்லைன் ஷாப்பிங்

ஆன்லைன் ஷாப்பிங்

பண்டிகை காலங்களில் கூட்ட நெரிசலில் சிக்காமல் தங்களுக்கு விருப்பமான நேரத்தில் பொருட்களை எளிதாக வாங்கி கொள்கின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது அதிகரித்து வருகிறது.

அசோகெம் ஆய்வு

அசோகெம் ஆய்வு

கடந்த 2014ஆம் ஆண்டு இந்த பண்டிகை காலத்தில் ரூ.30,000 கோடிக்கு விற்பனை நடந்தது. 2015ஆம் ஆண்டு இது 40 சதவீதம் முதல் 45 சதவீதம் அதிகரிக்கும். அதாவது, நுகர்வோர் ஆன்லைன் மூலமாக மட்டும் சுமார் ரூ.52,000 கோடி ரூபாய்க்கு பொருட்கள் வாங்குவார்கள் என்று அசோசெம் தனது ஆய்வில் கணித்தது. கடந்த ஆண்டு ரு. 22 ஆயிரம் கோடி செலவிடப்பட்டது.

ஆன்லைன் வாடிக்கையாளர்கள்

ஆன்லைன் வாடிக்கையாளர்கள்

நடப்பாண்டு மொபைல் போன்கள், மின்னணு சாதனங்கள், நுகர்வோர் பொருட்கள், ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள் போன்றவற்றை வாங்க ஆன்லைன் வாடிக்கையாளர்கள் சுமார் 30,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையைச் செலவிட வாய்ப்புள்ளதாக அசோசம் அமைப்பு தெரிவித்துள்ளது.

ஆய்வு முடிவு சொல்வதென்ன?

ஆய்வு முடிவு சொல்வதென்ன?

சென்னை, டெல்லி, மும்பை, அகமதாபாத், கொல்கத்தா, ஹைதராபாத், பெங்களூரு, சண்டிகர், டேராடூன் ஆகிய முக்கிய பத்து நகரங்களில் இதுகுறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் வெளியாகியுள்ளது.

ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்வம்

ஆன்லைன் ஷாப்பிங்கில் ஆர்வம்

ஆன்லைனில் ஷாப்பிங் செய்பவர்களில் 65 சதவிகிதம் பேர் ஆண்களாகவும், 35 சதவிகிதம் பேர் பெண்களாகவும் இருப்பதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. 18 முதல் 25 வயதிற்குட்பட்ட வாடிக்கையாளர்கள் 35 சதவிகிதம் பேர் பொருட்களை வாங்குகின்றனர். ஆணோ, பெண்ணோ பண்டிகை காலங்களில் 24 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் பண்டிகை காலங்களில் அதிகம் பொருட்களை ஆன்லைனில் வாங்குகின்றனர் என்பது தெரியவந்துள்ளது.

மொபைல் போன்களே அதிகம்

மொபைல் போன்களே அதிகம்

ஆன்லைனில் அநேகம் பேர் மொபைல் போன்களை 78 சதவிகிதம் பேர் வாங்குகின்றனர். எலக்ட்ரானிக் பொருட்களை 72 சதவிகிதம் பேரும், நுகர்பொருட்களை 69 சதவிகிதம் பேரும் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. பரிசு பொருட்களை 58 சதவிகிதம் பேரும், வீட்டு உபயோகப் பொருட்களை 45 சதவிகிதம் பேரும் வாங்குவதாக ஆய்வு தெரிவிக்கிறது.

ஆன்லைனில் பொருட்கள்

ஆன்லைனில் பொருட்கள்

அசோசம் அமைப்பின் பொதுச் செயலாளரான டி.எஸ்.ராவத்,அதிவேக இணைய வசதிகளின் வளர்ச்சி அதிகமாகியுள்ளதால், சிறு நகரங்களில் வசிப்பவர்களிலும் கூட ஏராளமானோர் ஆன்லைனில் பொருட்களை வாங்க ஏதுவாக உள்ளது என்றார். நாட்டின் ஸ்மார்ட்போன் பயன்பாடு நல்ல வளர்ச்சியடைந்துள்ளது ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு உதவியாக இருக்கிறது. என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆன்லைன் பலகாரங்கள்

ஆன்லைன் பலகாரங்கள்

பண்டிகை காலங்களில் வீட்டில் அம்மா முருக்கு சுடும் போதே அதை சுடச் சுட சாப்பிடுவது தனி ருசி. இன்றைய கால கட்டத்தில் யாரும் அடுப்பின் சூட்டில் சிரமப்பட தயாராக இல்லை. பண்ட் பலகாரங்கள் வாங்கிய காலம் போய் இப்போது ஆன்லைன் பலகார விற்பனை காலமாகி விட்டது. இப்படியே போனால் இனி பண்டிகையையும் ஆன்லைனில்தான் கொண்டாட வேண்டும். அவசர யுகத்தில் அதுவும் நடந்தாலும் ஆச்சரியமில்லை.

English summary
Home appliances and gift articles on the occasion of Diwali, the sale may touch Rs 30,000 crore as against Rs. 22,000 crore spent last year, a quick survey by ASSOCHAM
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X