For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெற்றோர் பராமரிப்பு: அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யும் அஸ்ஸாம் அரசு

அஸ்ஸாமில் தங்களது பெற்றோரை ஒழுங்காகப் பராமரிக்காத அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

குவகாத்தி: பெற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளை ஒழுங்காகப் பராமரிக்காத அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10 முதல் 15 சதவிகிதம் வரை பிடித்தம் செய்ய அஸ்ஸாம் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்தப் புதிய சட்டம் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி முதல் அமலுக்கு வருகிறது.

முகநூலில் பெண் ஒருவர் எழுதிய பதிவில் "பெற்றோர்களை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு மகள்களுக்கு இருந்தால் நாட்டில் முதியோர் இல்லங்களுக்கு அவசியம் இருக்காது" என்று குறிப்பிட்டிருந்தார். அதற்கு பல ஆண்களும், மாமியார், மாமனாரை பெற்றோர்கள் போல மருமகள்கள் கவனித்துக்கொண்டால் முதியோர் இல்லங்களே இருக்காது என்று பதிலிட்டிருந்தனர். இது நூற்று நூறு உண்மைதான்.

For Neglecting Parents Government Staff In Assam To Face Pay Cuts

இந்தியா முழுவதுமே வயதான பெற்றோர்கள் கவனிப்பதில் பிள்ளைகள் அதிகம் சிரத்தை எடுத்துக்கொள்வதில்லை. பெற்றோரை, முதியோரைச் சரிவர பார்த்துக் கொள்ளாமல் அவர்களின் பிள்ளைகளே கைவிடும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதற்குப் பல பகுதிகளிலும் அதிகரித்து வரும் முதியோர் இல்லங்களே நேரடி சாட்சியாகும்.

பெற்று, வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை, அவர்களது வயதான காலத்தில் கவனித்துக் கொள்ள வேண்டியது பிள்ளைகளின் கடமையாகும். இதேபோல ஆதரவற்ற மாற்றுத்திறனாளி சகோதர சகோதரிகளை பராமரிப்பதும் பாரம் என்று கருதுகின்றனர். இந்நிலையில், இதைச் சட்டம் போட்டுக் கட்டாயமாக்க வேண்டிய சூழ்நிலை தற்போது நிலவுகிறது.

நாட்டில் மூத்த குடிமக்களை அவர்களின் பிள்ளைகளே கைவிடும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. பல பகுதிகளிலும் அதிகரித்துவரும் முதியோர் இல்லங்களே இதற்கு நேரடி சாட்சியாகும். பெற்று, வளர்த்து ஆளாக்கிய பெற்றோரை, அவர்களது வயதான காலத்தில் கவனித்துக்கொள்ள வேண்டியது பிள்ளைகளின் கடமையாகும். இந்த நிலையில், இதை சட்டம் போட்டுக் கட்டாயமாக்க வேண்டிய சூழ்நிலை தற்போது நிலவுகிறது.

இந்தப் பிரச்சினை தொடர்பாக, நீதிமன்றங்களில் பல வழக்குகள் தொடரப்படுகின்றன. இந்த நிலையில், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணும்விதமாக, அஸ்ஸாம் அரசு புதிய வழிமுறையைக் கண்டுள்ளது. வயதான பெற்றோர்களை காக்கும் வகையில் அசாம் அரசு புதிய சட்டம் ஒன்றை இயற்றியுள்ளது. அதன்படி, வயதான பெற்றோர்களை வருமானம் அதிகம் பெற்றும் முதியோர் இல்லத்தில் சேர்த்தால், ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 10% பிடித்தம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, அஸ்ஸாம் மாநில நிதியமைச்சர் ஹிமாந்த பிஸ்வாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "அஸ்ஸாமில் தங்களது பெற்றோரை ஒழுங்காகப் பராமரிக்காத அரசு ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்.

போதிய வருவாய் ஆதாரம் இல்லாததால் அன்றாட வாழ்வுக்காகத் தங்களது பிள்ளைகளை நம்பி பல பெற்றோர் உள்ளனர். அந்தப் பிள்ளைகள் அரசுப் பணியில் இருந்து, தங்களது பெற்றோரை ஒழுங்காகப் பராமரிக்கவில்லை என்றால் அவர்களது சம்பளத்தில் 10 முதல் 15 சதவிகிதம் வரை பிடித்தம் செய்யப்பட்டு பெற்றோர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும். மேலும், தங்களது மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளையும் அரசு ஊழியர்கள் பராமரிக்க வேண்டியது அவசியம்.

இதுதொடர்பான மசோதா மாநிலச் சட்டசபையில் கடந்த ஆண்டு நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு மாநில அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து இந்தப் புதிய சட்டம் அக்டோபர் மாதம் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி முதல் அமலுக்கு வருகிறது.

பிள்ளைகளைச் சார்ந்திருந்த போதிலும், ஓய்வூதியம் பெறும் பெற்றோருக்கு இந்தச் சட்டம் பொருந்தாது என்று தெரிவித்துள்ளார். தங்களது மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளையும் அரசு ஊழியர்கள் பராமரிக்க வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல பல மாநில அரசுகளுட் சட்டம் இயற்ற வேண்டும் என்பதே பெற்றோர்களின் வேண்டுகோளாக உள்ளது.

English summary
Assam Minister Himanta Biswa Sarma said that if a particular government employee does not look after his or her parents then 10 per cent of their salary would be deducted and transferred to their parents' accounts.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X