For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜக ஆட்சியில் தனிநபர் சராசரி வருமானம் 45சதவிகிதம் அதிகரிப்பு : மத்திய புள்ளியியல் துறை

இந்தியாவில் 2017-2018 நிதியாண்டில் தனி நபர் சராசரி வருமானம் ரூ.1, 12, 835 ஆகவும் 2018-2019ம் நிதியாண்டில் ரூ.1, 25, 397 ஆகவும் தனி நபர் சராசரி வருமானம் உயர்ந்து இருப்பதாக மத்திய புள்ளியியல் துறை தெரி

Google Oneindia Tamil News

டெல்லி : தேசிய ஜனநாயக கூட்டணி பதவியேற்ற பின்னர் கடந்த 4 ஆண்டுகளில் நாட்டின் தனி நபர் வருமானம் 45% அதிகரித்து உள்ளதாக புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் தனிநபர் சராசரி வருமானம் 2 மடங்காக அதிகரித்து இருப்பதாகவும் மத்திய புள்ளியியல் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய புள்ளியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், 2017-2018 நிதியாண்டில் தனி நபர் சராசரி வருமானம் ரூ.1, 12, 835 ஆகவும் 2018-2019ம் நிதியாண்டில் ரூ.1, 25, 397 ஆகவும் தனி நபர் சராசரி வருமானம் உயர்ந்து இருப்பதாக மத்திய புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2015-16ஆம் ஆண்டில் நமது நாட்டில் தனி நபர் வருமானம் 94 ஆயிரத்து 130 ரூபாய் ஆக இருந்தது. இது 2016-17ஆம் நிதியாண்டு மதிப்பீட்டின்படி 1 லட்சத்து 3 ஆயிரத்து 219 ரூபாயாக அதிகரித்தது. அதற்கு முந்தைய ஆண்டு தனி நபர் வருமானம் 7.4 சதவிகிதம் வளர்ச்சி கண்டிருந்தது.

Per capita income grew 45% under Narendra Modi regime says CSO

நான்காண்டில் வளர்ச்சி

கடந்த 2011-2012ம் நிதியாண்டில் தனி நபர் சராசரி வருமானம் ரூ. 63, 462 இருந்தது. இது 2012-2013ம் நிதியாண்டில் தனி நபர் சராசரி வருமானம் ரூ. 70,983 ஆகவும் 2013-2014ம் நிதியாண்டில் ரூ.29,118 ஆகவும் அதிகரித்து உள்ளது. 2014-2015,2015-2016 மற்றும் 2016-2017ம் நிதியாண்டுகளில் தனி நபர் சராசரி வருமானம் முறையே ரூ.86,7647, ரூ. 94,731 மற்றும் ரூ.1,03,870 ஆக அதிகரித்து இருப்பதாக அரசின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

நாட்டின் பொருளாதாரம்

தேசிய ஜனநாயக கூட்டணி பதவியேற்ற பிறகான 4 ஆண்டுகளில் தனி நபர் வருமானம் 45% அதிகரித்து உள்ளதாக புள்ளியியல் துறை தெரிவித்துள்ளது. முன்னதாக இந்தியாவின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 7.2% ஆக உயரும் என்று மத்திய புள்ளியியல் துறை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் தனி நபர் வருமானம்

தனிநபர் வருமானம் அதிகரிப்பது, ஒரு நாட்டின் செல்வ செழிப்பிற்கான அறிகுறி ஆகும். தமிழகத்தில், 2011 - 12ம் நிதியாண்டில், தனிநபர் வருமானம், 1 லட்சத்து, 3,600 ரூபாயாக மட்டுமே இருந்தது. ஆனால், 2017 - 18ல், இது, 1 லட்சத்து, 88 ஆயிரத்து, 492 ரூபாயாக அதிகரித்துள்ளது.இதன்மூலம், 2011ம் ஆண்டை காட்டிலும், தனிநபர் வருமானம், 85 ஆயிரம் ரூபாய் கூடுதலாகி உள்ளதாக சட்டசபையில் துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The income earned by an average Indian doubled in seven years, from Rs 63,642 per year in 2011-12 to Rs 1.25 lakh in 2018-19, the first advance estimates of national income released by the Central Statistics Office show.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X