For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

7 முறை விலை ஏறிய பெட்ரோல் விலை 2 ரூபாய் குறைய வாய்ப்பு?

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Petrol price to be cut by Rs 2 per litre
டெல்லி: தொடர்ந்து 7 முறை விலை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து பெட்ரோல் விலை இன்னும் ஓரிரு நாட்களில் ரூ.2 அளவுக்குக் குறைய வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய ரூபாய்க்கு நிகராக அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்த போது எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோலின் விலையை அடிக்கடி உயர்த்தின.

கடந்த சிலமாதங்களில் மட்டும் பெட்ரோல் விலை 7 முறை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய ரூபாயின் மதிப்பு சற்று உயர்வை அடைந்து வருவதன் பலனாக இன்னும் ஓரிரு நாட்களில் பெட்ரோல் விலையை ரூ.2 அளவுக்குக் குறைக்க வாய்ப்பிருப்பதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 30ம் தேதி விலை குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்றும் அவர் சூசகமாகக் கூறினார்.

ஒரு வேளை வரும் திங்கள் அன்று பெட்ரோல் விலை குறைக்கப்பட்டால், 7 முறை விலை ஏற்றப்பட்டு, மே மாதத்துக்குப் பிறகு நடைபெறும் முதல் விலை குறைப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
After seven consecutive increases in petrol prices since May, the state-owned oil marketing firms are likely to provide some relief to consumers ahead of the forthcoming festive season by reducing the petrol prices between Rs 2-3 a litre starting early next week, when the OMCs meet on September 30 to review prices.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X