For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெட்ரோல் லிட்டருக்கு 65 பைசா குறைப்பு: இன்று டீசல் விலையும் குறைகிறது

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: பெட்ரோல் விலை நேற்று நள்ளிரவு முதல் லிட்டருக்கு 65 பைசா குறைக்கப்பட்டது. இதன்படி சென்னையில் பெட்ரோல் விலை ஒரு லிட்டர் ரூ.70.87 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவில் இருந்து நாடு திரும்பிய பிறகு டீசல் விலை குறைப்பு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது.

Petrol price cut by 65 paise, decision on diesel after PM's return

5 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள மோடி இன்று மாலை நாடு திரும்புகிறார். முன்னதாக நேற்று நள்ளிரவு முதலே டீசல் விலை குறைப்பு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

முதல் முறையாக

எனினும் 5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக டீசல் விலை குறைக்கப்பட இருப்பதால், பிரதமர் நாடு திரும்பிய பிறகு அந்த அறிவிப்பை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 1 ரூபாய் குறையும் என்று தெரிகிறது.

பெட்ரோல் விலை

பெட்ரோல் விலை 15 நாள்களுக்கு ஒருமுறை மாற்றப்பட்டு வருகிறது. இவை பெரும்பாலும் விலை ஏற்றமாகவே இருக்கிறது. சமீபத்தில் சற்று குறைந்தது. நேற்று நள்ளிரவு முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 65 பைசா குறைக்கப்பட்டுள்ளது.

டீசல் விலை

டீசலுக்கு கொடுக்கப்படும் மானியத்தை குறைப்பதற்காக 2013 ஜனவரி முதல் ஒவ்வொரு மாதமும் டீசல் விலையில் லிட்டருக்கு 50 பைசா உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டு அதன்படி விலை உயர்த்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.

English summary
Petrol price was on Tuesday cut by 65 paise a litre, but the first reduction in diesel rates in over five years was put off until the return of Prime Minister Narendra Modi from the US.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X