For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2016-17 நிதியாண்டில் ரூபாய் நோட்டு அச்சடிக்க ரூ.7965 கோடி செலவு - ரிசர்வ் வங்கி

ரூபாய் நோட்டு அச்சடிக்க ரூ. 7,965 கோடி செலவு ஆகி உள்ளது என ரிசர்வ் வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: முந்தைய நிதியாண்டில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்ட வகையில் 3,421 கோடி ரூபாய் செலவானது. இந்த நிதியாண்டில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்க 7,965 கோடி ரூபாய் செலவாகியுள்ளது.

இந்த ஆண்டில் ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் செலவு மட்டும் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை தவிர்த்து 200 ரூபாய் நோட்டுகளும் அச்சடிக்கப்பட்டு உள்ளது.

கடந்தாண்டு நவம்பர் 8ஆம் தேதியன்று, புழக்கத்திலிருந்த பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். ஊழல், கறுப்புப் பணம் மற்றும் கள்ள நோட்டுகள் இவற்றை ஒழிப்பதற்காக இந்த ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிவித்தார்.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள்

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்கள்

கடந்தாண்டு டிசம்பர் 2ஆம் தேதியன்று, மத்திய நிதி இணையமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், ரூபாய் மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முன்னர் 1,716.5 கோடி எண்ணிக்கையிலான 500 ரூபாய் நோட்டுகளும், 685.8 கோடி எண்ணிக்கையிலான ஆயிரம் ரூபாய் நோட்டுகளும் என 15.44 லட்சம் கோடி ரூபாய் புழக்கத்தில் இருந்ததாக,ராஜ்யசபாவில் தெரிவித்திருந்தார்.

பழைய ரூபாய் நோட்டுக்கள்

பழைய ரூபாய் நோட்டுக்கள்

2016-17 ரிசர்வ் வங்கியின் அறிக்கையின்படி, 632.6 கோடி எண்ணிக்கையிலான 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்குத் திரும்பியுள்ளன. 8.9 கோடி எண்ணிக்கையிலான 1000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்குத் திரும்பவில்லை என அறிக்கையில் கூறப்ப்பட்டுள்ளது. அதவாது, 8,900 கோடி ரூபாய் திரும்பவில்லை

இரு மடங்கு செலவு

இரு மடங்கு செலவு

2016-17ஆம் நிதியாண்டில் ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்க 7,965 கோடி ரூபாய் செலவு ஆகியுள்ளது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய ஆண்டில் அதாவது 2015 -16வது நிதியாண்டில் ரூபாய் நோட்டுக்கள் அச்சடிக்க 3,421 கோடி ரூபாய் மட்டுமே செலவு ஆகியுள்ளது

புதிய ரூபாய் நோட்டுக்கள்

புதிய ரூபாய் நோட்டுக்கள்

புதிய 2000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளைத் தவிர்த்து 50 ரூபாய் 200 ரூபாய் நோட்டுகளும் தற்போது அச்சடிக்கப்பட்டுள்ளதால், இதற்கான செலவு இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.

பணம் அச்சடிக்க எவ்வளவு செலவு

பணம் அச்சடிக்க எவ்வளவு செலவு

பழைய 500 ரூபாய் நோட்டு ஒன்று அச்சடிக்க ரூ.3.09 காசு செலவானது. அதே செலவிலேயே புதிய 500 ரூபாய் நோட்டு அச்சடிக்கப்படுகிறது. இதே போல் 1000 ரூபாய் நோட்டு ஒன்று அச்சடிக்க அரசுக்கு ரூ.3.54 செலவானது. அதே செலவில் தற்போது புதிய 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
In 2016-17, the banking regulator who is in charge of printing currency notes has spent Rs 7,965 crore on printing them against Rs 3420 crore last year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X