For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆரோக்கியா பாலைத் தொடர்ந்து பிற பால் விலையும் நாளை உயர்வு.. தயிர் விலை லிட்டருக்கு ரூ. 10 உயர்கிறது!

Google Oneindia Tamil News

சென்னை: ஆவின் பால் விலை உயர்வைத் தொடர்ந்து தனியார் பால் விலை உயர்ந்து வருகிறது. ஏற்கனவே ஆரோக்கியா பால் விலை உயர்த்தப்பட்டது. தற்போது பிற தனியார் பால் நிறுவனங்களும் நாளை பால் விலையை உயர்த்துகின்றன.

திருமலா, ஹெரிட்டேஜ், டோட்லா, ஜெர்சி ஆகிய தனியார் பால் விலை நாளை முதல் லிட்டருக்கு ரூ.4 உயருகிறது.

தயிர் விலையும் அதிகரிக்கிறது. தயிர் விலை லிட்டருக்கு ரூ.12 கூடுகிறது.

 தனியார் பால் விலை உயர்வு

தனியார் பால் விலை உயர்வு

திருமலா, ஹெரிட்டேஜ் புல்கிரீம் பால் லிட்டர் ரூ.48-ல் இருந்து 52 ஆகவும் நிலைப்படுத்தப்பட்ட பால் லிட்டர் ரூ.44-ல் இருந்து 48 ஆக உயருகிறது.

சமன்படுத்திய பால்

சமன்படுத்திய பால்

சமன்படுத்திய பால் லிட்டர் ரூ.40-ல் இருந்து 44 ஆகவும் இருமுறை சமன்படுத்திய பால் ரூ.36-ல் இருந்து 40 ஆகவும் அதிகரிக்கிறது.

டோட்லா, ஜெர்சி

டோட்லா, ஜெர்சி

டோட்லா, ஜெர்சி நிறுவனங்கள் பால் லிட்டருக்கு ரூ.2 முதல் 4 வரை உயர்த்துகின்றன.

6ம் தேதி ஆரோக்கியா விலை உயர்வு

6ம் தேதி ஆரோக்கியா விலை உயர்வு

கடந்த 6-ந் தேதி ஆரோக்கியா பால் லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் மற்ற தனியார் பால் நிறுவனங்களும் பால், தயிர் விலையை உயர்த்துகின்றன.

தயிர் விலை கிடுகிடு உயர்வு

தயிர் விலை கிடுகிடு உயர்வு

தனியார் தயிர் பாக்கெட் விலை ரூ.10-ல் இருந்து 12 ஆக உயருகிறது. 60 மில்லி தயிர் கப் ரூ.1 அதிகரிக்கிறது. 100 மில்லி தயிர் கப் ரூ.10-ல் இருந்து 12 ஆகவும், 120 மில்லி தயிர் கப் ரூ.12-ல் இருந்து 14 ஆகவும், 200 மில்லி தயிர் கப் ரூ.15-ல் இருந்து 18 ஆகவும், 400 மில்லி தயிர் கப் ரூ.32-ல் இருந்து 35 ஆகவும் அதிகரிக்கிறது.

இதுவரை 5 முறை உயர்வு

இதுவரை 5 முறை உயர்வு

தனியார் பால் விலை இந்த ஆண்டு மட்டும் 5 முறை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வருடத்தில் லிட்டருக்கு ரூ.12 உயர்த்தி உள்ளனர். உயர்த்தப்பட்ட தனியார் பால் விலையை விட ஆவின் பால் குறைவாக உள்ளது. 1 லிட்டருக்கு ரூ.7 குறைவாக இருக்கிறது.

விலை உயர்வைத் தவிருங்கள்

விலை உயர்வைத் தவிருங்கள்

தனியார் பால் நிறுவனங்கள் அடிக்கடி விலையை உயர்த்துவதை தடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு பால் முகவர்கள் சங்க மாநில தலைவர் பொன்னுசாமி எச்சரித்துள்ளார். அவர் கூறுகையில், மின்சாரம், பஸ் கட்டணத்தை அரசு நிர்ணயிப்பது போல் தனியார் பால் விலையையும் அரசு நிர்ணயிக்க வேண்டும். அப்போதுதான் விலையை கட்டுப்படுத்த முடியும். ஆவினுக்கு வரக்கூடிய பால் கொள்முதலை தடுப்பதற்காக இந்த விலை ஏற்றம் செய்யப்படுகிறது என்றார் அவர்.

English summary
After Arokiya, other private mike firms have announced price hike and this will be implemented from tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X