For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ தலைவராக ரஜ்னிஷ்குமார் நியமனம்!

By Veera Kumar
Google Oneindia Tamil News

சென்னை: பாரத ஸ்டேட் வங்கியின் தலைவராக ரஜ்னிஷ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளர். எஸ்பிஐ வங்கி தலைவராக ரஜ்னிஷ்குமார் 3 ஆண்டுகள் பதவியில் இருப்பார்.

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐயின் மேலாண்மை எடிட்டராக உள்ள ரஜ்னிஷ்குமாருக்கு இந்த பதவி மூலம் புரமோஷன் கிடைத்துள்ளது. அக்டோபர் 6ம் தேதியோடு தற்போதைய எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா பதவி காலம் முடிவடையும் நிலையில் அந்த இடத்தை ரஜ்னிஷ்குமார் நிரப்ப உள்ளார்

Rajnish Kumar appointed as new SBI chairman for 3 years

1980ம் ஆண்டு எஸ்பிஐ வங்கியில் புரோபஷினரி ஆபீசராக பணிக்கு சேர்ந்த ரஜ்னிஷ்குமார் பல்வேறு துறைகளிலும் பணியாற்றியுள்ளார். எம்பிஐ கேபிடர் மார்க்கெட்ஸ் பிரிவின் தலைமைச் செயல் அதிகாரியாகவும் இவர் பணி புரிந்துள்ளார்.

நாட்டின் வங்கித்துறை கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ள இந்த காலகட்டத்தில் ரஜ்னிஷ்குமார் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

English summary
Rajnish Kumar, current managing editor of the State Bank of India, has been appointed as the new SBI chief for three years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X