For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'இன்டிகா'வை விற்கப் போய் 'இன்சல்ட்'டுக்குள்ளான டாடா!

Google Oneindia Tamil News

மும்பை: கார் தயாரிப்பு குறித்து உங்களுக்கு என்ன தெரியும். எதற்கு அதில் கால் வைத்தீர்கள்... இது ரத்தன் டாடாவைப் பார்த்து போர்டு கம்பெனியினர் சொன்ன வார்த்தை... ஆனால் அதே போர்டு பின்னாளில் டாடாவை நோக்கி வந்தபோது, சற்றும் மனதில் வைத்துக் கொள்ளாமல் போர்டுக்கு உதவிக் கரம் நீட்டினார் ரத்தன் டாடா.

1999ம் ஆண்டு இந்த அவமானத்தை சந்தித்தார் டாடா. இதை அப்போது அவரது குழுவில் இடம் பெற்றிருந்த ஒருவர் இப்போது வெளிப்படுத்தியுள்ளார்.

முதல் முயிற்சியில் தடுமாற்றம்

முதல் முயிற்சியில் தடுமாற்றம்

பயணிகள் கார் வர்த்தகத்தில் அப்போது தடுமாறிக் கொண்டிருந்தது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். இதையடுத்து தனது கார் உற்பத்திப் பிரிவை போர்டு நிறுவனத்திடம் விற்க முயன்றபோதுதான் இந்த அவமானத்தை சந்தித்தாராம் டாடா.

பிரவீன் கட்லே

பிரவீன் கட்லே

இந்தத் தகவல்களை ரத்தன் டாடாவுக்கு நெருக்கமான பிரவீன் கட்லே வெளிப்படுத்தியுள்ளார். இவர்தான் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பின்னாளில் மிகப் பெரிய நிறுவனமாக உயர முக்கியக் காரணம். தற்போது பிரவீன், டாடா கேப்பிடல் தலைவராக உள்ளார்.

மானத்தை வாங்கிய இன்டிகா

மானத்தை வாங்கிய இன்டிகா

சரி, எந்தக் காருக்காக இந்த அவமானத்தை டாடா சந்தித்தார் தெரியுமா.. இன்டிகா காரால்தான். ஆனால் டாடாவின் படைப்புகளிலேயே இன்றளவும் உருப்படியான கார் என்ற பெயர் இந்த இன்டிகாவுக்கு மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

முதலில் சறுக்கல்

முதலில் சறுக்கல்

1998ம் ஆண்டு முதல் பயணிகள் கார் தயாரிப்பில் டாடா இறங்கியது. முதல் காராக இன்டிகாவை அந்த ஆண்டு களம் இறக்கியது டாடா. ஆனால் இன்டிகாவுக்கு அப்போது பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்தார் ரத்தன் டாடா. அதன் பிறகு நடந்தது குறித்து கட்லே கூறியதாவது....

விற்க ஆலோசனை

விற்க ஆலோசனை

இன்டிகாவுக்கு சரியான வரவேற்பு இல்லாததால் அந்தக் கார்ப் பிரிவை மூடி விடுமாறும், யாரிடமாவது விற்று விடுமாறும் பலரும் ரத்தன் டாடாவுக்கு ஆலோசனை கூறினார்கள்.

இந்தியாவுக்கு வந்த போர்டு

இந்தியாவுக்கு வந்த போர்டு

இதையடுத்துத போர்டு நிறுவனத்திற்குத் தகவல் போனது. அவர்களது குழு இந்தியா வந்தது. பாம்பே ஹவுஸில் உள்ள எங்களது தலைமை அலுவலகத்தில் வைத்து விவாதம் நடந்தது.

டெட்ராய்ட்டுக்குப் போனபோது

டெட்ராய்ட்டுக்குப் போனபோது

இதையடுத்து எங்களை டெட்ராய்ட்டுக்கு அழைத்தனர். ரத்தன் டாடா தலைமையிலான குழு அங்கு சென்றது. நானும் அதில் இடம் பெற்றிருந்தேன். 3 மணி நேரம் விவாதம் நடந்தது. விவாதத்திற்கு முடிவில் எங்களுக்கு அவமானமே மிஞ்சியது.

என்ன தெரியும் உங்களுக்கு

என்ன தெரியும் உங்களுக்கு

போர்டு நிறுவனத்தினர், டாடாவைப் பார்த்து கார் தயாரிப்பு குறித்து உங்களுக்கு என்ன தெரியும். எதற்காக இதில் இறங்கினீர்கள் என்றெல்லாம் கேட்டதால் அவர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அங்கிருந்து கிளம்பினோம்.

நியூயார்க் பயணம்

நியூயார்க் பயணம்

அங்கிருந்து நியூயார்க் பயணமானோம். அந்த 90 நிமிட விமான பயணித்தின்போது டாடா அமைதியாக வந்தார். அவரது முகத்தில் சோகம் தெரிந்தது.

மீண்டு வந்தோம்

மீண்டு வந்தோம்

பின்னர் போர்டு நிறுவனம் எங்களது இன்டிகாவை வாங்க முன்வந்தது. இருப்பினும் டாடா தரவில்லை. அதன் பிறகு நடந்தது வரலாறு.

2008ல் எங்களிடம் வந்த போர்டு

2008ல் எங்களிடம் வந்த போர்டு

அதே போர்டு நிறுவனம் 2008ம் ஆண்டு ஜாகுவார், லேன்ட்ரோவர் கார் பிராண்டுகளை ஒட்டுமொத்தமாக எங்களிடம் விற்க நாடி வந்தது போர்டு. அதை உடனடியாக ஏற்றார் டாடா. இதையடுத்து போர்டு தலைவர் பில் போர்டு, டாடாவைப் பாராட்டிப் பேசினார் என்றார் கட்லே.

English summary
Ratan Tata and his team faced "humiliation" when they went to sell the group's fledgling car business to Ford in 1999, but came back to "do a big favour" just nine years later by taking over the American giant's marquee brands Jaguar and Land Rover.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X