For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

0% வட்டியில் வங்கிகள் கடன் வழங்க ரிசர்வ் வங்கி தடை

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: மொபைல்போன், வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் போன்ற நுகர்வோர் பொருட்களுக்கு 0% வட்டியில் வங்கிகள் கடன் வழங்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

தீபாவளி, ஆடிப்பண்டிகை போன்ற காலங்களில் பொருட்களின் விற்பனையை அதிகரிக்க கடைகள் 0 சதவிகித வட்டியில் கடன் கொடுக்கப்படும் என விளம்பரங்கள் செய்கின்றன.

RBI

கடைக்காரர்களுடன் லோன் கொடுக்கும் நிறுவனங்கள் டைஅப் செய்து கொண்டு இந்த திட்டத்தை அறிவிக்கின்றன. கிரெடிட் கார்டு மூலம் பொருட்களை வாங்கி மாத தவணை கட்டுவதற்கு 0 சதவிகித வட்டி என்று விளம்பரப்படுத்தப்படுகிறது.

இந்த நிலையில் வராக்கடன் மற்றும் பண வீக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில், தற்போது திருவிழா காலம் என்பதால், நுகர்வோர் ‌பொருளுக்கு 0 சதவீத வட்டியில் கடன் வழங்கும் திட்டத்திற்கு ‌ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

கார்கள், டி.வி.க்கள் உள்ளிட்ட பொருட்கள் மீதான மீதான வட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது

அதேப்போன்று டெபிட் கார்டில் பொருட்கள் வாங்குவதற்கு கட்டணம் வசூலிப்பதற்கும் ரிசர்வ் வங்கி தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

English summary
The RBI Wednesday banned zero percent interest rate scheme for purchase of consumer goods, a move intended to protect customers but may dampen the festive spirit.The central bank has also said that no additional charges can be levied on payment through debit cards.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X