For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நவம்பரில் இருந்து ஏ.டி.எம்.மில் பணம் எடுப்பது 'காஸ்ட்லி'யாகப் போகிறது பாஸ்!

By Siva
Google Oneindia Tamil News

மும்பை: ஏ.டி.எம். மையத்தில் அளிக்கப்படும் இலவச பண பரிவர்த்தனை மாதம் 5 முறையில் இருந்து மூன்றாக குறைக்கப்படுகிறது.

ஏ.டி.எம். கார்டுகள் வந்ததும் வந்தது மக்கள் வங்கிகளுக்கு சென்று பணம் எடுக்கும் பழக்கத்தை விட்டுவிட்டனர். ஏ.டி.எம். மையத்திற்கு சென்று பணம் எடுப்பதையே மக்கள் விரும்புகிறார்கள்.

வரும் நவம்பர் மாதத்தில் இருந்து ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் எடுக்க கூடுதல் செலவு செய்ய தயாராக இருங்கள்.

குறைப்பு

குறைப்பு

கணக்கு இல்லாத வங்கி ஏ.டி.எம்.களில் இருந்து மாதம் 5 முறை இலவசமாக பணம் எடுக்கலாம். இந்த எண்ணிக்கை வரும் நவம்பர் மாதம் 1ம் தேதியில் இருந்து 3 ஆக குறைக்கப்படுகிறது.

மாதம் 5

மாதம் 5

நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களோ அந்த வங்கி ஏடிஎம் இல் இருந்து இனி மாதம் 5 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும்.

6 மெட்ரோக்கள்

6 மெட்ரோக்கள்

ஏ.டி.எம்.களில் இலவசமாக பணம் எடுக்கும் எண்ணிக்கை டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூர், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத்தில் மட்டும் தான் குறைக்கப்படுகிறது.

மீத நகரங்கள்

மீத நகரங்கள்

6 மெட்ரோக்கள் தவிர மீதமுள்ள நகரங்களில் உள்ள பிற வங்கி ஏடிஎம்களில் மாதம் 5 முறை இலவசமாக பணம் எடுக்கலாம். அங்கு எந்தவித மாற்றமும் இல்லை.

ரூ.20

ரூ.20

பிற வங்கி ஏ.டி.எம்.களிலும், கணக்கு உள்ள வங்கி ஏ.டி.எம்.களிலும் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையை தாண்டி பணம் எடுத்தால் ஒவ்வொரு முறையும் அதிகபட்சமாக ரூ.20 வசூலிக்கப்படும்.

ஏடிஎம்

ஏடிஎம்

ஏ.டி.எம். மையங்களை அமைத்து பராமரிக்கும் செலவு அதிகரிப்பதால் தான் இந்த நடவடிக்கையாம். கடந்த மார்ச் மாதம் நிலவரப்படி இந்தியாவில்
1.6 லட்சம் ஏ.டி.எம். மையங்கள் உள்ளன.

English summary
Frequent withdrawal of money from ATMs will become expensive from November, with the RBI imposing a limit of 3 transactions per month from ATMs of other banks and 5 from the same bank in six metropolitan cities.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X