For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரிசர்வ் வங்கியின் கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை.. வீடு, வாகன கடன் வட்டி குறையாது!

வங்கி கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

By lekhaka
Google Oneindia Tamil News

டெல்லி: வங்கி கடன் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ரிசர்வ் வங்கி நிராகரித்துள்ளது.

குறைந்து வரும் பணவீக்க விகிதம். பொருளாதார மந்த நிலை மற்றும் நெருங்கி வரும் பண்டிகை காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.

மத்திய அரசும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை குறைக்கும் என்று எதிர்நோக்கி காத்திருந்தது. வட்டி குறைப்பு என்பது மத்திய ரிசர்வ் வங்கியின் கையில் உள்ளதால், மத்திய அரசும் ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை விடுத்தது.

நிதிக்கொள்கை கூட்டம்

நிதிக்கொள்கை கூட்டம்

இன்று மும்பையில் ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கை கூட்டம் ஆளுநர் உர்ஜித் படேல் தலைமையில் நடைபெற்றது. அப்போது வங்கிகளின் குறுகிய காலக்கடன் வட்டி 6 சதவிகிமாகவே நீடிக்கும் என முடிவெடுக்கப்பட்டது.

ரெப்போ வட்டி விகிதம்

ரெப்போ வட்டி விகிதம்

செய்தியாளர்களிடம் பேசிய உர்ஜித் படேல், வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய காலக் கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் ஏதுமில்லை. ரெப்போ வட்டி விகிதம் 6 சதவிகிதமாகவே தொடரும் என்றார். இதே போன்று ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 0.25 சதவிகிதம் குறைக்கப்பட்டு 5.75 சதவிகிதமாக நீடிக்கிறது.

வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதம்

வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதம்

பணவீக்கத்தை அதிகரிக்கவிடக் கூடாது என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதம் குறைய வாய்ப்பு இல்லை.

ரிசர்வ் வங்கி நிர்ணயம்

ரிசர்வ் வங்கி நிர்ணயம்

கடந்த ஆகஸ்டு மாதத்தில் நடந்த நிதிக் கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கு அளிக்கும் ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 புள்ளிகள் குறைத்து 6 சதவிகிதமாக நிர்ணயித்தது.

நுகர்வோர் பணவீக்க விகிதம்

நுகர்வோர் பணவீக்க விகிதம்

கடந்த ஆகஸ்டு மாதத்தில் சில்லறை பணவீக்க விகிமானது கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவாக 3.36 சதவிகிமாகவும், ஜூலை மாதத்தில் நுகர்வோர் பணவீக்க விகிதம் 2.36 சதவிகிமாகவும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
The Reserve Bank of India in its bi-monthly monetary policy review announced that it will not change key rates. The repo rate will remain unchanged at 6 per cent and the reverse repo rate will remain at 5.75 per cent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X