For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரெப்போ வட்டி விகிதம் மாற்றமில்லை - 6.25 % தொடரும் - உர்ஜித் படேல்

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே உள்ள 6.25 சதவிகித வட்டி விகிதமே தொடரும் அறிவித்துள்ளது.

By Super Admin
Google Oneindia Tamil News

டெல்லி: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கூறியுள்ளார். ஏற்கனவே உள்ள 6.25 சதவீத வட்டி விகிதமே தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.

2017-18-ம் ஆண்டுக்கான கொள்கையை ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் வெளியிட்டார். 2017-18-ம் ஆண்டில் முதல் ஆறு மாதத்திற்கு பணவீக்கம் 4.5 சதவிகிதமாக இருக்கும் என்று உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார். அடுத்த 6 மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 5 சதவிகிதமாக இருக்கும் என்று மதிப்பீடு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

விவசாயக்கடன்களை தள்ளுபடி செய்தால் ஒழுங்குமுறை பாதிக்கும் என்றும் நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கும் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் கூறியுள்ளார்.

ரெப்போ வட்டி விகிதம்

ரெப்போ வட்டி விகிதம்

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ஏற்கனவே உள்ள 6.25 சதவிகித வட்டி விகிதமே தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் குறுகிய கால கடன் வட்டி 6.25 சதவிகிதம் என்பதில் மாற்றம் ஏதும் இல்லை என அறிவித்தார்.

ரிவர்ஸ் ரெப்போ

ரிவர்ஸ் ரெப்போ

அதே சமயம், வங்கிகளிடம் இருந்து ரிசர்வ் வங்கி பெறும் கடனுக்ககான ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவிகிதம் குறைக்கப்பட்டு 6 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொருளாதார வளர்ச்சி

பொருளாதார வளர்ச்சி

நடப்பு நிதியாணடில் பொருளாதார வளர்ச்சி 7.4 சதவிகிதமாக இருக்கும் என்றார். 2017 - 18 முதல் அரையாண்டில் பணவீக்க விகிதம் 4.5 சதவிகிதமாகவும், இரண்டாவது அரையாண்டில் 5 சதவிகிதமாகவும் இருக்கும் என்று கூறியுள்ளார்.

வாராக்கடன்

வாராக்கடன்

விவசாய கடன் தள்ளுபடி குறித்து கருத்து தெரிவித்த அவர், இது கடன் வழங்கும் ஒழுங்கு முறையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்றார். நேர்மையான முறையில் கடன் பெறுவதையும் விவசாய கடன் தள்ளுபடி பாதிக்கும் என்றார். 2016 - 17-ம் நிதியாண்டின் கடைசி காலாண்டில் வாராக்கடன் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

விவசாயக் கடன்கள்

விவசாயக் கடன்கள்

விவசாயக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டால் பண வீக்கம் அதிகரிக்கும். ஆர்.பி ஐ ஆளுநர் உர்ஜித் படேல். நேர்மையான முறையில் கடன் பெறுவதை பாதிக்கும் வகையில் விவசாயக்கடன் தள்ளுபடி இருக்கும் உர்ஜித் படேல் கூறியுள்ளார்.

நிதிப்பற்றாக்குறை

நிதிப்பற்றாக்குறை

விவசாய கடன் ரத்து செய்வது முறையாக வரி செலுத்துவோரின் பணம் விரயமாக்கப்படவதற்கு சமமானது என்றும் கூறியுள்ளார். மேலும் இது முறையான கடன் கொள்கையை சீர்குலைத்து விடும் என்றும் தெரிவித்துள்ளார். சர்வதேச அளவில் ஒப்பிடும் போது அரசின் நிதிப்பற்றாக்குறை அதிகமாக உள்ளதாக தெரிவித்த அவர், இதனால் நாட்டின் பணவீக்கம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறினார்.

English summary
RBI’s monetary policy committee votes 6-0 to hold the repo rate. The reverse repo rate, however, has been raised by 25 bps to 6%
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X