For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அம்மாடியோவ்..!!ஒரே காலாண்டில் ரூ.10 ஆயிரம் கோடி லாபம்..! வேற லெவலில் அம்பானியின் ரிலையன்ஸ்

Google Oneindia Tamil News

டெல்லி: ஒரே காலாண்டில் 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

இந்தியாவின் மிகப் பெரிய குழுமமான ரிலையன்ஸ் நிறுவனம், நடப்பு நிதியாண்டிற்கான 3-வது காலாண்டு முடிவுகளை பிரபல ரிலையன்ஸ் குழுமம் வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள விவரங்கள் வருமாறு: நிறுவனத்தின் நிகர லாபம் ரூ. 10,251 கோடியாகவும், இதன் ஆண்டுக்காண்டு வளர்ச்சி விகிதமானது 8.82%-ஆக உயர்ந்திருக்கிறது.

இந்த நிகர லாபமானது முந்தைய காலாண்டில் ரூ. 9,420 கோடி ரூபாயாக இருந்தது. அது தற்போது, நிறுவனத்தின் மொத்த வருவாய் 56.38% உயர்ந்து ரூ. 1,60,299 கோடியாக உச்சம் பெற்றிருக்கிறது.

கடன் தொகை விவரங்கள்

கடன் தொகை விவரங்கள்

மேலும், கடந்தாண்டு மார்ச் மாதம் முடிவில் ரூ. 2,18,763 கோடியாக இருந்த கொடுக்கப்பட வேண்டிய கடன் தொகையானது கடந்த டிசம்பரில் ரூ. 2,74,381 கோடியாக உயர்ந்திருக்கிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது. நிறுவனங்களின் வரலாற்றில் இது அசுர வளர்ச்சி என்று கூறப்படுகிறது.

நுகர்வோர்களுக்கு விற்பனை

நுகர்வோர்களுக்கு விற்பனை

இந்த அசுர வளர்ச்சி குறித்து ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி கூறியதாவது:இன்றைய தலைமுறை நுகர்வோர்களுக்கு ஏற்றார்போல் தங்களது பொருட்களின் விற்பனை நடந்து வருகிறது.

விரைவான முன்னேற்றம்

விரைவான முன்னேற்றம்

சில்லரை மற்றும் ஜியோ தளங்களில் செயல்பட்டு வரும் வர்த்தகங்களில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. இதேபோல், நாளுக்கு நாள் நிறுவனம் நல்ல முறையில் வளர்ச்சி அடைந்து வருகிறது என்று அம்பானி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

10 ஆயிரம் கோடி வருமானம்

10 ஆயிரம் கோடி வருமானம்

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான இந்தக் காலாண்டில் அந்நிறுவனத்தின் நிகர லாபம் 10 ஆயிரத்து 251 கோடி ரூபாய் உள்ளது. இதன்மூலம் ஒரே காலாண்டில் 10 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் ஈட்டிய முதல் இந்திய நிறுவனம் என்ற பெருமையை ரிலையன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.

கணிசமாக உயர்ந்த லாபம்

கணிசமாக உயர்ந்த லாபம்

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் அந்நிறுவன லாபம் 9 ஆயிரத்து 420 கோடி ரூபாயாக இருந்தது. தனது பெட்ரோ கெமிக்கல் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களின் லாபங்கள் கணிசமான அளவு உயர்ந்ததையடுத்து இந்த சாதனையை ரிலையன்ஸ் நிறுவனம் எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
Mukesh Ambani led Reliance Industries posted a growth of 7.72 per cent in net profit at Rs 10,251 crore on consolidated basis in December quarter. With this, RIL has become the first private-sector Indian company to cross the Rs 10,000 crore-mark in terms of net profit, the company said in a statement.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X