For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரெப்போ வட்டி விகிதம் 6% ஆக குறைப்பு- கடன்களின் வட்டி விகிதம் குறைய வாய்ப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

மும்பை: வங்கிகள் பெறும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது 6.25 சதவீதமாக இருந்தது.

கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, சில்லரை பணவீக்கம் குறைந்திருப்பதும், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தொய்வு காரணமாகவும், வங்கிகள் பெறும் குறுகிய கால கடனுக்கான, 'ரெப்போ' வட்டி விகிதத்தை, ரிசர்வ் வங்கி குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்தது போலவே வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய வாய்ப்பிருக்கிறது.

Repo rate slashed by 25 bps to 6%, lowest since 2010

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தலைமையிலான நிதி கொள்கை குழு, இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை கூடி வங்கிகளின் வட்டி விகிதத்தை நிர்ணயிக்கிறது.

அதன்படி இன்று மும்பையில் இந்த கூட்டம் நடந்தது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்:

வங்கிகள் பெறும் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது 6.25 சதவீதமாக இருந்தது.

இதே போன்று ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 0.25 சதவிகிதம் குறைக்கப்பட்டு 5.75 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இது 6 சதவீதமாக இருந்தது.

கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சில்லரை பணவீக்கம் குறைந்திருப்பதாலும், தொழில் துறை உற்பத்தி வளர்ச்சியில் ஏற்பட்டுள்ள தொய்வை சரி செய்யும் விதமாகவும் இந்த வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ரிசர்வ் வங்கியின் இந்த அறிவிப்பால் வீடு, வாகனங்களுக்கான கடன் வட்டி விகிதம் குறைய வாய்ப்புள்ளது.

English summary
The RBI presented its third monetary policy review for the current fiscal year, in which it cut the benchmark repo rate by 25 bps to 6 percent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X