For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

”கூடிய சீக்கிரம் 50 பைசாவும் மியூசியத்தில்தான்” ரிசர்வ் வங்கி செய்தி

Google Oneindia Tamil News

டெல்லி: 50 காசு நாணயம் தயாரிப்பு நிறுத்தப்பட போவதாக செய்தி வெளியாகி உள்ளது.

நமது நாட்டில் புழக்கத்தில் இருந்த பெரும்பாலான நாணயங்கள் திரும்பப் பெறப்பட்டு விட்டன.

தற்போது 50 பைசா நாணயத்தையும் திரும்ப பெற ரிசர்வ் வங்கி முடிவெடுத்துள்ளது.

சில்லறை காசு கண்காட்சி:

சில்லறை காசு கண்காட்சி:

முன்பு புழக்கத்தில் இருந்த சில்லறை காசுகளை இப்போது நாணய கண்காட்சிகளில் தான் காண முடியும். நீண்ட நாட்களாக மக்களிடம் நடமாடிய 25 காசு நாணயத்தை 2011 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி திரும்ப பெற்றுக்கொண்டது.

நடைமுறை நாணயங்கள்:

நடைமுறை நாணயங்கள்:

தற்போது 50 காசு, 1 ரூபாய், 2 ரூபாய், 5 ரூபாய் நாணயங்கள் நடை முறையில் உள்ளன. இதில் 50 காசு நாணயத்துக்கு மதிப்பு குறைந்து வருகிறது. 50 காசு மதிப்புடைய பொருட்கள் எதுவும் இல்லை. ரூ.1.50 என்றாலும் வியாபாரிகள் 2 ரூபாய் எடுத்துக்கொள்கிறார்கள். 50 காசு இல்லை என்று வாடிக்கையாளர்கள் சொன்னாலும் பல வியாபாரிகள் விட்டு விடுகிறார்கள்.

இப்போலாம் 50 பைசா இல்லாட்டி சாக்லெட்தான்:

இப்போலாம் 50 பைசா இல்லாட்டி சாக்லெட்தான்:

50 காசுகளின் பயன்பாடு வெகுவாக குறைந்து வருகிறது. பெரும்பாலான பொருட்களின் விலையும், வியாபார நிறுவனங்களின் விலையிலேயே உள்ளன. இதனால் 50 காசுகளை பொது மக்கள் பயன்படுத்துவது இல்லை.

வாங்க மறுக்கும் வியாபாரிகள்:

வாங்க மறுக்கும் வியாபாரிகள்:

50 காசு புழக்கம் பெரும்பாலும் குறைந்து விட்டது. பொதுமக்கள் இப்போது 50 காசுகளை பயன்படுத்துவதை தவிர்த்து வருகிறார்கள். வியாபாரிகளும் 50 காசுகளை வாங்குவதில் ஆர்வம் காட்டுவது இல்லை. சிலர் வாங்க மறுக்கிறார்கள்.

குறையும் தேவை:

குறையும் தேவை:

ரிசர்வ் வங்கி இதுவரை 50 காசுகளை செல்லாது என்று அறிவிக்கவில்லை. தொடர்ந்து இவை பயன்பாட்டில் உள்ளன என்றாலும் 50 காசுகளின் தேவை குறைத்து வருகிறது.

விரைவில் வாபஸ் பெறப்படும்:

விரைவில் வாபஸ் பெறப்படும்:

எனவே 50 காசுகளின் தயாரிப்பை படிப்படியாக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சில ஆண்டுகளில் 50 காசுகள் முழுமையாக வாபஸ் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

English summary
Reserve bank says that going to withdraw the 50 paisa coin soon. The reason for the withdraw is reduced flow of coins.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X