For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜனவரியில் சில்லறை பணவீக்கம் 5.07% ஆக குறைந்தது- காய்கறி, பழங்கள் விலை சரிவு

ஜனவரி மாதம் நுகர்வோர் பணவீக்கம் குறைந்து 5.07 சதவிகிதமாக குறைந்துள்ளது. பழங்கள், காய்கறிகள் விலைகள் சரிவால் சில்லறை பணவீக்கம் சரிந்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: ஜனவரி மாதம் நுகர்வோர் பணவீக்க விகிதம் 5.07% ஆக குறைந்துள்ளது. காய்கறிகள், பழங்கள் விலை குறைந்துள்ளன. இதனையடுத்து நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணை அடிப்படையாகக் கொண்டு பணவீக்க விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 17 மாதங்களில் இல்லாத அளவிற்கு 2017 டிசம்பரில் பணவீக்கம் 5.21 சதவீதமாக இருந்த நிலையில் ஜனவரியில் 5.14 சதவீதமாக பணவீக்கம் இருக்கும் என ராய்ட்டர்ஸ் கணித்திருந்தது. கணிப்புக்கு மாறாக பணவீக்கம் சரிவடைந்துள்ளது. இது தற்காலிக சரிவுதான் பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

தொழில் உற்பத்திக் குறியீடு டிசம்பரில் 7.1 சதவீதமாக உள்ளது. உற்பத்தி அதிகமாக இருந்த காரணத்தால் தொழில் உற்பத்தி குறியீட்டில் முன்னேற்றம் இருக்கிறது நவம்பர் மாத தொழில் உற்பத்தி குறியீடு 8.8 சதவிதமாகும்.

பழங்கள், காய்கறிகள் விலை குறைவு

பழங்கள், காய்கறிகள் விலை குறைவு

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால் நாட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருகிறது. எனினும் சில்லறை விற்பனை விலையில் காய்கறிகள், பழங்கள் விலை குறைந்தே காணப்படுகின்றன. நுகர்வோர்கள் மகிழ்ச்சியுடன் காய்கறிகளை பை நிறைய வாங்கி வருகின்றனர்.

பருவமழையால் குறையும்

பருவமழையால் குறையும்

பணவீக்கத்தைப் பொறுத்தவரை கச்சா எண்ணெய் விலையைவிட பருவமழை முக்கியப் பங்கு வகிக்கும், கடந்த ஆண்டு பருவமழை நன்றாக பெய்தது. விளைச்சல் அதிகரித்துள்ளது. வரும் காலங்களில் பருவமழை நன்றாக இருக்கும் பட்சத்தில் பணவீக்கம் மேலும் குறையும் என்பது பொருளாதார வல்லுநர்களின் கணிப்பு.

சரிவடைந்த பணவீக்கம்

சரிவடைந்த பணவீக்கம்


கடந்த ஆண்டு இதே காலத்தில் உணவுப்பொருட்களின் பணவீக்கம் 4.96 சதவிகிதத்தில் இருந்து 4.70 சதவிகிதமாக குறைந்துள்ளது. காய்கறிகள் விலை 29.13 சதவிகிதத்தில் இருந்து 26.97 சதவிகிதமாக சரிவடைந்து உள்ளது. பழங்களின் விலை 6.63 சதவிகிதத்தில் இருந்து 6.24 சதவிகிதமாக சரிவடைந்துள்ளது. எரிசக்தி மற்றும் எரிபொருள் பணவீக்கம் 7.90 சதவிகிதத்தில் இருந்து 7.73 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

ரெப்போ வட்டி விகிதம்

ரெப்போ வட்டி விகிதம்

மத்திய புள்ளியியல் அலுவலகத் மாதந்தோறும் சில்லறை பணவீக்கம் பற்றிய புள்ளி விபரத்தை வெளியிடுகிறது. இதனை அடிப்படையாக வைத்துதான் ரிசர்வ் வங்கி வட்டிவிகிதங்கள் தொடர்பான கொள்கை முடிவுகளை எடுக்கிறது.

வட்டி விகிதம் மாற்றமில்லை

வட்டி விகிதம் மாற்றமில்லை

கடந்த வாரம் ரிசர்வ் வங்கியானது வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யவில்லை. ரெப்போ விகிதமானது 6 சதவிகிதமே தொடரும். அதுபோலவே பிற வங்கிகளிடம் வாங்கிய கடனுக்கான வட்டி விகிதத்திலும் (Reverse Repo Ratio) எந்தவித மாற்றத்தையும் செய்யவில்லை. அதுவும் 5.75 சதவிகிமே தொடரும் ஆளுநர் உர்ஜித் பட்டேல் கூறியுள்ளார்.

உயர வாய்ப்பு

உயர வாய்ப்பு

உணவுப் பொருட்களின் விலையில் ஏற்பட்ட சிறிய மாற்றங்களின் காரணமாக பணவீக்கம் சிறிதளவு குறைந்துள்ளது. இது தற்காலிகமானதுதான். கச்சா எண்ணெய் மற்றும் வீட்டு வாடகை சலுகை காரணமாக பணவீக்கம் உயரலாம் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறி வருகின்றனர்.

சரிவில் இருந்து மீளும்

சரிவில் இருந்து மீளும்

வட்டி விகிதங்களில் ஏற்கெனவே மாற்றம் இருக்காது என ரிசர்வ் வங்கி அறிவித்துவிட்டதால் அடுத்த சில மாதங்களுக்கு வட்டி விகிதம் குறைய வாய்ப்பில்லை மேலும் தொழில் உற்பத்திக் குறியீட்டு வளர்ச்சி, சரிவிலிருந்து மீண்டு வருவதற்கான அறிகுறி என்றும் பொருளாதார வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

ஜனவரி மாத பணவீக்கம்

ஜனவரி மாத பணவீக்கம்


டிசம்பர் மாதத்திய சில்லறை பணவீக்க விகிமானது 4 சதவிகிமாக இருக்கும் என்று ரிசர்வ் வங்கி மதிப்பிட்டிருந்தது. ஆனால் ரிசர்வ் வங்கியின் மதிப்பீட்டையும் தாண்டி 5.21 சதவிகித்தை தொட்டது. மேலும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை, 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையை செயல்படுத்துவதற்கு தேவைப்படும் கூடுதல் நிதிச் சுமை, சுங்க வரி போன்றவற்றால் நடப்பு ஆண்டின் நிதிப் பற்றாக்குறை 3.5 சதவிகிதமாக இருக்கும் என்பதாலும் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் செய்யாமல் பழைய விகிதமே தொடரும் என அறிவித்தது. இந்த நிலையில் ஜனவரி மாத பணவீக்கம் சரிவடைந்துள்ளது.

English summary
Consumer prices rose 5.07 per cent in January from a year earlier, the Statistics Ministry said in a statement in New Delhi on Monday, in line with the 5.1 per cent.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X