For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அக்டோபர் மாத சில்லறை பணவீக்கம் 3.31% ஆக குறைவு - காய்கறிகள், பழங்கள் விலை குறைவு

நாட்டின் சில்லறை பணவீக்கம் அக்டோபர் மாதம் 3.31 சதவிகிதமாகக் குறைந்தது. இதுவே செப்டம்பர் மாதம் 3.70 சதவிகிதமாக இருந்தது.

Google Oneindia Tamil News

டெல்லி: காய்கறி, பெட்ரோல், டீசல் போன்ற அடிப்படைத் தேவை பொருட்கள் சில்லறை சந்தையில் விலை ஏறும் போது பணவீக்கம் அதிகரிப்பதும், அதுவே விலை குறைவாக இருக்கும் போது பணவீக்கம் குறைவதும் இயல்பு ஆகும். நாட்டின் சில்லறை பணவீக்கம் அக்டோபர் மாதம் 3.31 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

மத்திய ரிசர்வ் வங்கி ஜூலை செப்டம்பர் மாத காலாண்டில் 3.7 சதவீதமாகச் சில்லைரை பணவீக்கம் இருக்கும் கணித்து இருந்தது. இதுவே ஜனவரி மார்ச் காலாண்டில் 3.8 முதல் 4.5 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது. செப்டம்பர் மாதம் தொழில் துறை வளர்ச்சி 4.5 சதவீதமாக இருந்தது என்று அரசு வெளியிட்டுள்ள தரவுகள் கூறுகின்றன.

 Retail inflation at 13month low in October

நுகர்வோர் விலை குறையீட்டு எண் 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 3.7 சதவிகிதமாக இருந்தது. இது கடந்த ஆண்டு 2017 அக்டோபர் மாதத்தில் 3.58 சதவிகிதமும், செப்டம்பர் மாதத்தில் 3.28 சதவிகிதமாக இருந்தது என மத்திய புள்ளியல் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் அக்டோபர் மாதத்தில் 0.86 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்தில் 0.51 சதவிகிதமாக இருந்தது. காய்கறிக்களுக்கான பணவீக்கம் 8.06 சதவிகிதம் குறைந்தது. இதுவே செப்டம்பர் மாதத்தில் 4.15 சதவிகிதமாக இருந்தது. பழங்கள் விலை அடிப்படையில் பணவீக்கம் 0.35 சதவிகிதம் குறைந்தது. இது செப்டம்பர் மாதத்தில் 1.12 சதவிகிதம் அதிகரித்து இருந்தது.

அக்டோபர் மாதத்தில் தானிய வகைகள், முட்டை, பால் ஆகியவற்றின் விலை மிதமாக இருந்தது. எரிபொருளுக்கான பணவீக்கம் 8.55 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இது செப்டம்பர் மாதத்தில் 8.47 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் மாதத்தில் உணவு பணவீக்கம் குறைந்து விட்டதால் சில்லறை பணவீக்கம் குறைந்து விட்டது. உணவு மற்றும் எரிபொருள் செலவுகள் குறைந்துவிட்டதால், தொடர்ந்து மூன்றாவது மாதமாக மத்திய வங்கியின் நடுத்தர கால இலக்குகளை விட குறைவானதாக உள்ளது. டாலருக்கு எதிராக சற்றே விலை உயர்ந்த நிலையில், எரிபொருளுக்கான வரி விலையை சமீபத்தில் குறைத்து, உலகளாவிய கச்சா எண்ணெய் செலவினங்களை குறைப்பதன் மூலம், நுகர்வோர் விலை பணவீக்கம் அக்டோபரில் 3.31 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

English summary
Retail inflation too slipped to a 13-month low of 3.31 per cent in October on the back of deflation in food items, with the Food Price Index inflation data released by the Central Statistics Office on Monday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X