For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சில்லறை பணவீக்கம் 3.69% ஆக சரிவுதான்... பெட்ரோல், டீசல் பட்ஜெட்டில் துண்டுதான்

கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு ஆகஸ்ட் மாத சில்லறை பணவீக்கம் 3.69 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: ஆகஸ்டு மாதத்தின் நுகர்வோர் பணவீக்க விகிதம் கணிசமாக குறைந்துள்ளதால், நடுத்தர வர்க்கத்தின் மாதாந்திர பட்ஜெட்டில் மளிகை சாமான்களுக்கான செலவு சுமார் 0.29 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. ஆனால், பெட்ரோல் மற்றும் டீசலுக்கான பட்ஜெட்டில் துண்டு விழுந்துள்ளது.

சில்லறை பணவீக்கம் 3.69 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் இலக்கான 4 சதவிகிதத்தை கடந்த 10 மாதங்களில் இப்போதுதான் முதன்முறையாக சில்லறைப் பணவீக்கம் அடைந்துள்ளது.

Retail inflation low of 3.69% in August

இதுகுறித்து ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள அரசு அறிக்கையில், "நுகர்வோர் விலை குறியீட்டின் அடிப்படையில் ஆகஸ்ட் மாதத்துக்கான சில்லறைப் பணவீக்க விகிதம் கடந்த 10 மாதங்களில் இல்லாத அளவுக்கு 3.69 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. ஜூலை மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் 4.17 விழுக்காடாக இருந்தது" என்று கூறப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கியின் இலக்கான 4 சதவிகிதத்தை கடந்த 10 மாதங்களில் இப்போதுதான் முதன்முறையாக சில்லறைப் பணவீக்கம் அடைந்துள்ளது. இதற்கு முன்பு சில்லறைப் பணவீக்கம் கடந்த ஆண்டு அக்டோபரில் 3.58 விழுக்காடாக இருந்தது.

தென்மேற்கு பருவமழை தொடர்ந்து கைகொடுத்து வருவதால், விவசாய விளைபொருட்களின் விலை கணிசமாக குறைந்து வருகிறது. இதன் தாக்கம் உணவுப் பொருட்களின் விலையிலும் எதிரொலிப்பதால் நுகர்பொருட்களின் விலையும் தொடர்ந்து இறங்குமுகமாக உள்ளது, என்று மத்திய புள்ளியியல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜுன் மற்றும் ஆகஸ்டு மாதத்தில் நடைபெற்ற நிதிக்கொள்கை கூட்டத்தில் வட்டி விகிதம் 0.25 புள்ளிகள் உயர்த்தப்பட்டது. நுகர்பொருட்களின் விலை குறைவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணியாகும்.

நடப்பு நிதியாண்டின் இரண்டாவது அரையாண்டில் சில்லறைப் பணவீக்க விகிதம் 4.7 சதவிகிமாக இருக்கும் என்று மத்திய ரிசர்வ் வங்கி உத்தேசமாக தெரிவித்திருந்தது. ஆனால் இது 4.8 சதவிகிமாக இருக்கும் என்று கடந்த ஆகஸ்டு 1ஆம் தேதி மாற்றியமைத்து. அதுபோலவே, வரும் 2019ஆம் நிதியாண்டில் சில்லறைப் பணவீக்க விகிதம் 5 சதவிகிதமாக இருக்கும் என்றும் உத்தேசமாக தெரிவித்துள்ளது.

இதனால் தற்போது உணவுப் பொருட்கள் விலை வீழ்ச்சியிலிருந்து மீண்டு வருகிறது. ராய்டர்ஸ் நிறுவனத்தின் ஆய்வறிக்கை ஆகஸ்ட் மாதத்தில் சில்லறைப் பணவீக்கம் 3.68 சதவிகிதமாக இருந்தது என்று மதிப்பிட்டுள்ளது.

ஜூலை மாதத்தில் தொழில் துறை உற்பத்திக் குறியீடு (ஐஐபி) 6.6 சதவிகித வளர்ச்சி கண்டிருந்தது என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. இது ஜூன் மாதத்தின் 7 சதவிகிதமாக இருந்த நிலையில் ஜூலையில் பின்னடைவைக் கண்டுள்ளது. அதேநேரத்தில் இந்த ஆண்டில் கச்சா எண்ணெய் விலை இதுவரையில் 15 சதவிகித அளவுக்கு உயர்வு கண்டுள்ளது. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 71.86 ரூபாயாகச் சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகஸ்டு மாதத்தின் நுகர்வோர் பணவீக்க விகிதம் கணிசமாக குறைந்துள்ளதால், நடுத்தர வர்கத்தின் மாதாந்திர பட்ஜெட்டில் மளிகை சாமான்களுக்கான செலவு சுமார் 0.29 சதவிகிம் குறைந்துள்ளது. ஆனால், பெட்ரோல் மற்றும் டீசலுக்கான பட்ஜெட்டில் துண்டு விழுந்துள்ளது. கடந்த ஜூலை மாதத்தில் பெட்ரோலியப் பொருட்களுக்கான பணவீக்க விகிதம் 7.96 சதவிகிதம் உயர்ந்திருந்தது. இது ஆகஸ்டு மாதத்தில் 8.47 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

English summary
India’s retail inflation fell to 3.69 percent in August, lowest in ten months, driven by cheaper food items, according to data released by statistics ministry on Wednesday
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X