For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 73 ஆக சரிவு - வரலாறு காணாத வீழ்ச்சியால் பாதிப்பு என்ன?

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி கண்டு இன்று 73ரூபாயை தாண்டியுள்ளது.

Google Oneindia Tamil News

டெல்லி: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு திங்கட்கிழமை வணிகநேர முடிவில் 72ரூபாய் 91காசுகளாக இருந்தது. இன்றைய வணிகநேரத் தொடக்கத்தில் 43காசுகள் சரிந்து 73ரூபாய் 34காசுகளாக இருந்தது.

கடந்த சில நாட்களாக இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியடைந்து வருகிறது. முன்னதாக இன்று காலை இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.73.34 ஆக சரிந்தது குறிப்பிடத்தக்கது.

Rupee plunges to new record low, breaches 73 level against dollar

காலை பத்துமணி நிலவரப்படி 47காசுகள் சரிந்து 73ரூபாய் 39காசுகளாக இருந்தது. இது வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் டாலருக்கு எதிரான ரூபாயின் மிகக் குறைந்த மதிப்பாகும். அதேபோல் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 73ரூபாயைத் தாண்டியுள்ளதும் இதுவே முதன்முறையாகும்.

பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதும், இறக்குமதியாளர்களும் வங்கிகளும் அமெரிக்க டாலரை வாங்கிக் குவிப்பதுமே ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

உலக அளவில் எண்ணெய் விலை உயர்வு மற்றும் இறக்குமதியாளர்களுக்கு அதிக அளவு அமெரிக்க டாலர் தேவை ஆகியவற்றால் இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்துள்ளது.

இதேநேரத்தில் மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியபொழுது, சென்செக்ஸ் குறியீடு 137.62 புள்ளிகள் சரிவடைந்து 36,388.52 புள்ளிகளாக உள்ளது.

ரூபாய் மதிப்பு சரிவால் சாமானியர்களுக்கு என்ன மாதிரியான பிரச்சனை ஏற்படலாம் என நிதித்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதால் இறக்குமதி குறைந்து வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது, இறக்குமதி பொருட்களின் மீதான வரியை உயர்த்தும் நடவடிக்கையை நோக்கி அரசை தள்ளும்.

இந்தியாவில் இருந்து வெளிநாட்டுச் சுற்றுலா செல்லும் மக்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இப்படி வெளிநாட்டிற்குச் சுற்றுலா செல்லத் திட்டமிட்டு உள்ளவர்களுக்கு டாலரின் ஆதிக்கத்தால் அதிகச் செலவு செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

மேலும் டாலர் மதிப்பு அதிகமாக இருக்கும் இந்த சூழ்நிலையில் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களின் விலை அதிகமாக இருக்கும்.

அதே நேரத்தில் டாலர் மதிப்பில் செய்யப்பட்டுள்ள அனைத்து முதலீடுகள் தற்போது அதன் ரூபாய் மதிப்பில் அதிக லாபத்தை அடையும்.

இதில் டாலர் முதலீடு, மியூச்சுவல் பண்ட் போன்றவை முக்கியப் பங்கு விகிக்கிறது.

சீனா மீது அமெரிக்கா விதித்துள்ள 200 பில்லியன் டாலர் அளவிலான வரி விதிப்புகளைத் தொடர்ந்து அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மளமளவெனச் சரிந்து வருகிறது. நாணய சந்தை வரலாற்றில் இந்திய ரூபாயின் மதிப்பு இந்த அளவிற்கு எப்போதும் வீழ்ச்சி அடையவில்லை, 2009ஆம் ஆண்டு உலக நாடுகள் திவாலான போதும் கூட இந்திய ரூபாய் எவ்வளவு வீழ்ச்சி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The rupee plunged to a fresh record low on Wednesday, breaching the 73-mark for the first time ever.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X