For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூபாய் மதிப்பில் சூப்பர் மாற்றம்... ரூ 61.65 ஆக உயர்ந்தது!

By Shankar
Google Oneindia Tamil News

Rupee rises to 1-month high of 61.65
மும்பை: கடந்த மாதம் சடசடவென சரிந்த ரூபாயின் மதிப்பில், இந்த ஒரு வாரமாக சூப்பர் மாறுதல்... விறுவிறுவென உயர்ந்து மீண்டும் தன் பழைய நிலைக்குத் திரும்புகிறது ரூபாய்.

கடந்த வாரம் வரை ஒரு டாலருக்கு நிகராக ரூ 68 என இருந்த மதிப்பு, இப்போது ரூ 61 ஆக உயர்ந்துள்ளது.

அமெரிக்க நிதித்துறை தனது 85 பில்லியன் டாலர் மதிப்பிலான ஊக்கத் திட்டங்களை திரும்பப் பெற்றுக் கொண்டதும் இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

புதன்கிழமை மாலை 63.88 ஆக இருந்த ரூபாய் மதிப்பு, இன்று காலை 61.65 ஆக உயர்ந்துள்ளது. கடந்த ஒரு மாதத்தில் இன்றுதான் இந்த அளவு உயர்ந்த இடத்துக்கு வந்திருக்கிறது ரூபாய்.

இந்திய ரூபாய் மட்டுமல்லாது, ஆசியாவின் மற்ற கரன்சிகளின் மதிப்பும் 2 சதவீதம் வரை உயர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ரூபாய் மதிப்பு தொடர்ந்து உயர்ந்ததால், இந்திய பங்குச் சந்தை சென்செக்ஸும் காலையிலேயே 600 புள்ளிகள் வரை உயர்ந்து காணப்பட்டது.

English summary
The rupee and bonds surged to more than one-month highs on Thursday morning as the US Fed refrained from withdrawing monetary stimulus as had been widely expected by global markets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X