For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உங்க எஸ்பிஐ வங்கிக்கணக்கில் பணம் மினிமம் பேலன்ஸ் இருக்கா! இல்லாவிட்டால் இன்று முதல் அபராதம்

எஸ்பிஐ வங்கிகணக்கில் மினிமம் பேலன்ஸ் இன்றுமுதல் வைத்துக்கொள்வது அவசியமாகிறது. இல்லையெனில் அபராதம் செலுத்த வேண்டும்.

By Super Admin
Google Oneindia Tamil News

டெல்லி: எஸ்பிஐ எனப்படும், பாரத ஸ்டேட் வங்கி இன்று முதல் முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதன்படி வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்காதவர்களிடம் இன்று முதல் அபராதம் வசூலிக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

எஸ்பிஐ எனப்படும், பாரத ஸ்டேட் வங்கி உடன், அதன் ஐந்து துணை வங்கிகள், இன்று முதல் இணைக்கப்படுகின்றன. இதனையடுத்து அந்த ஐந்து துணை வங்கி கிளைகள் எஸ்பிஐ வங்கி கிளைகளாக செயல்பட துவங்கும்.

ஸ்டேட் பேங்க் ஆப் பிகானிர் அண்டு ஜெய்ப்பூர், ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூரு, ஸ்டேட் பேங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர் ஆகிய ஐந்து துணை வங்கியின் வாடிக்கையாளர்கள், எஸ்பிஐ வாடிக்கையாளர்களாக மாறுவர். பாரதிய மகிளா வங்கியும் எஸ்பிஐ உடன் இணைக்கப்படுகிறது. இந்த இணைப்பு ஒரு பக்கம் இருக்க எஸ்பிஐ வங்கி மினிமம் பேலன்ஸ் பற்றியும் அபராதம் எவ்வளவு விதிக்கப்படும் என்பது பற்றியும் மிக முக்கிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.

மினிமம் பேலன்ஸ்

மினிமம் பேலன்ஸ்

எஸ்பிஐ வங்கியில் மெட்ரோ நகரங்களில் உள்ள வங்கி கணக்குகளில் 5,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும். 50 சதவீதம் வரை குறைவாகக் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 50 ரூபாயும், 50 முதல் 75 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 75 ரூபாயும், 75 சதவீதத்திற்கும் குறைவாக ஜீரோ பேலன்ஸ் இருந்தால் 100 ரூபாயும் அபராதமாகச் செலுத்த வேண்டும்.

அபராதம் எவ்வளவு

அபராதம் எவ்வளவு

புறநகர்ப் பகுதிகள் எஸ்பிஐ வங்கி கணக்குகளில் 3,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும். 50 சதவீதம் வரை குறைவாகக் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 40 ரூபாயும், 50 முதல் 75 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 60 ரூபாயும், ஜீரோ பேலன்ஸ் இருந்தால் 80 ரூபாயும் அபராதமாகச் செலுத்த வேண்டும்.

நகரங்களில் வங்கிக்கணக்கு

நகரங்களில் வங்கிக்கணக்கு

நகரப் பகுதிகளில் வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் 2,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும். 50 சதவீதம் வரை குறைவாகக் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 25 ரூபாயும், 50 முதல் 75 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 50 ரூபாயும், 75 சதவிகிதத்திற்கும் குறைவாக அதாவது ஜீரோ பேலன்ஸ் இருந்தால் 75 ரூபாயும் அபராதமாகச் செலுத்த வேண்டும்.

கிராம வங்கிக் கணக்கு

கிராம வங்கிக் கணக்கு

கிராமப் பகுதிகளில் வங்கி கணக்கு வைத்துள்ளவர்கள் 1,000 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும். 50 சதவீதம் வரை குறைவாகக் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 20 ரூபாயும், 50 முதல் 75 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் 30 ரூபாயும், 75 சதவீதத்திற்கும் குறைவாக ஜீரோ பேலன்ஸ் இருப்புத் தொகை இருந்தால் 50 ரூபாயும் அபராதமாகச் செலுத்த வேண்டும். செக் புக் இல்லாத வங்கி கணக்குகளுக்கு 500 ரூபாய் குறைந்தபட்ச இருப்புத் தொகை இருந்தால் போதுமானது.

ஏடிஎம் கட்டண வசூல்

ஏடிஎம் கட்டண வசூல்

எஸ்பிஐ ஏடிஎம் வாடிக்கையாளர்கள் முதல் 5 பரிவர்த்தனையை இலவசமாகப் பெற முடியும், இதுவே அதனை மீறும் போது 10 ரூபாய் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இதுவே பிற வங்கி ஏடிஎம் மையங்களில் பணம் எடுக்கும் போது மூன்று முறை இலவசமாகவும் அதற்கு அதிகமான முறை பணம் எடுக்கும் போது 20 ரூபாய் கட்டணமாகவும் வசூலிக்கப்படும்.

இணையதள பண பரிவர்த்தனை

இணையதள பண பரிவர்த்தனை

1,000 ரூபாய்க்கும் குறைவாக 20 முறை இலவசமாகவும், 1,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை பரிவர்த்தனை செய்யும் போது 40 முறை இலவசமாகவும், அதற்கு அதிகமான தொகைக்குப் பணப் பரிவர்த்தனை செய்யும் போது முழுவதும் இலவசமாகவும் இணையதள வங்கி சேவை மூலம் பரிமாற்றம் செய்யலாம். இங்குக் கொடுக்கப்பட்ட வரம்பை மீறும் போது ஒரு பரிவர்த்தனைக்கு 5 ரூபாய்க் கட்டணமாக வசூலிக்கப்படும்.

English summary
April 1, State Bank of India, the behemoth that has grown bigger following the merger of its five associates with itself, will levy fresh charges on account holders, including on their minimum balance, ATM use and cash-handling.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X