For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

5 லிட்டர் இலவச பெட்ரோல் சலுகை டிசம்பர் 15 வரை எஸ்பிஐ நீட்டிப்பு - எப்படி பெறுவது

எஸ்பிஐ கார்டு அல்லது பீம் எஸ்பிஐ செயலி மூலம் 100 ரூபாய்க்கு கூடுதலாகப் பெட்ரோல் போடும் போது 2018 நவம்பர் 23 வரை 5 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டு வந்தது. இந்த சலுகை டிசம்பர் 15ஆம் தேதி வரை நீட்ட

Google Oneindia Tamil News

Recommended Video

    இலவச பெட்ரோல் சலுகை டிசம்பர் 15 வரை எஸ்பிஐ நீட்டிப்பு - எப்படி பெறுவது

    சென்னை: எஸ்பிஐ கார்டு அல்லது பீம் எஸ்பிஐ செயலி மூலம் 100 ரூபாய்க்கும் கூடுதலாகப் பெட்ரோல் போடும் போது 5 லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கப்பட்டு வந்த சலுகையை 2018 டிசம்பர் 15ஆம் தேதி வரை எஸ்பிஐ வங்கி நீட்டித்துள்ளது.

    5 லிட்டர் பெட்ரோலை இலவசமாக பெறுவதற்கு இதை ஃபாலோ பண்ணுங்க

    SBI extends deadline for free 5 litre petrol scheme

    18 வயது நிரம்பிய அனைவருக்கும் இந்தச் சலுகை வழங்கப்படும். இந்தியன் ஆயில் எண்ணெய் நிலையங்களில் 100 ரூபாய்க்கு பெட்ரோல் போட்டுக்கொண்டு எஸ்பிஐ கார்டுகள் அல்லது பீம் யூபிஐ மூலம் பணம் செலுத்த வேண்டும். பணத்தை செலுத்திய பிறகு வங்கி அளிக்கும் 12 இலக்க யூபிஐ குறிப்பு எண் அல்லது ஆறு இலக்க அங்கீகாரம் குறியீடு விவரங்களை சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    மொபைல் போனில் இருந்து “BHIM SBI Pay: 12-digit UPI reference number தேதி, மாதம் உள்ளிட்ட விவரங்களை அளித்து எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். ஒவ்வொரு நாளும் 10,000 எஸ்எம்ஸ் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 50 ரூபாய், 100 ரூபாய், 150 ரூபாய் மற்றும் 200 ரூபாய் எனக் கேஷ்பேக் சலுகை வழங்கப்படும்.

    எத்தனை முறை பெட்ரோல் போட்டுப் பணம் செலுத்தினாலும் இந்தச் சலுகையை வாடிக்கையாளர்களால் பெற முடியும். ஆனால் ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே எஸ்எம்எஸ் அனுப்ப முடியும். இதில் வெற்றி பெறும் வாடிக்கையாளர்கள் குறித்த அறிவிப்பு இரண்டு வாரத்திற்குள் அறிவிக்கப்படும். இந்தியன் ஆயில் பெட்ரோல் நிலையங்களில் செலவு செய்யக்கூடிய எக்ஸ்ட்ரா ரிவார்ட் வெகுமதி புள்ளிகளும் வழங்கப்படும்.

    English summary
    The State Bank of India has extended the deadline of its scheme promising up to 5 litres of free petrol to Indian Oil customers.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X