For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எஸ்.பி.ஐ, ஹெச்.டி.எப்.சி, வீட்டுக் கடன் வட்டிக் குறைப்பு

By Mayura Akilan
Google Oneindia Tamil News

டெல்லி: வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை பாரத ஸ்டேட் வங்கி 0.15% சதவிகிதம் முதல் 0.35% வரை குறைத்துள்ளது. பெண்கள் வாங்கும் கடன்களுக்கு கூடுதலாக 0.05 சதவிகித வட்டி தள்ளுபடி வழங்கப்படும் என்றும் அவ்வங்கி அறிவித்துள்ளது.

75 லட்சம் ரூபாய்க்கு கீழான வீட்டுக் கடன்களுக்கு இனி வட்டி 10.15 சதவிகிதமாக இருக்கும் என்றும் பெண் வாடிக்கையாளர்களுக்கு இது 10.10 சதவிகிதமாக இருக்கும் என்றும் ஸ்டேட் வங்கி தெரிவித்துள்ளது.

SBI, HDFC cut home loan rates

புதிதாக கடன் வாங்குபவர்களுக்கு பொருந்தக் கூடிய இந்த வட்டிக் குறைப்புகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

வீட்டுக் கடன் வழங்குவதில் முன்னணியில் உள்ள மற்றொரு வங்கியான ஹெச்டிஎப்சி- யும் 0.25 சதவிகிதம் வட்டிக் குறைப்பை அறிவித்துள்ளது. ஆனால் இச்சலுகை வரும் ஜனவரி 31-ம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
State Bank of India (SBI) and Housing Development Finance Corporation (HDFC), on Thursday, reduced the home loan rates with effect from December 20.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X