For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பட்ஜெட்டால் ஏமாற்றம்.. பங்குச் சந்தையில் பெரும் சரிவு

By Veera Kumar
Google Oneindia Tamil News

டெல்லி: பட்ஜெட்டில் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து பங்குச் சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.

கடந்த வாரம் வியாழக்கிழமை 2018-19ம் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில், மிடில் கிளாஸ் மக்களுக்கு எந்த சலுகையும் செய்து கொடுக்கவில்லை.

Sensex, Nifty selloff today

இதனிடையே காப்பீடு திட்ட அறிவிப்பால், மருத்துவத்துறை பங்குகளும், விவசாயத்துறை சார்ந்த அறிவிப்புகளால் விவசாய துறை பங்குகளும் உயர்ந்தன. ஆனால், வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்தது. இதேபோல இன்றும் பங்கு சந்தையில் வீழ்ச்சி தொடர்ந்தது. ரிசர்வ் வங்கி இந்த வாரத்தில் தனது சீர்திருத்த கொள்கையை அறிவிக்க உள்ளதும் இதற்கு ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

வங்கி கேபிடல் துறை சார்ந்த பங்குகளும், சரிவடைந்துள்ளன. சென்செக்ஸ் 500 புள்ளிகளும், தேசிய பங்குச் சந்தை நிப்டி 10,600 புள்ளிகளும் குறைந்ததால் பங்குச் சந்தை துறை சார்ந்தவர்கள் பதற்றத்தில் உள்ளனர்.

English summary
Market selloff continues as Sensex plunges over 500 points amid weak global equities, Nifty slumps below 10,600 points.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X