For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தனியார் பஸ் போல குளு குளு ஏசி படுக்கை வசதி கொண்ட அரசு பஸ் - கட்டணம் எவ்ளோ தெரியுமா?

சென்னையில் இருந்து 6 நகரங்களுக்கு ஏ.சி. படுக்கை வசதி பஸ் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகளுக்கான கட்டண விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

Google Oneindia Tamil News

Recommended Video

    புதிய பேருந்துகளை ஆச்சர்யத்துடன் பார்த்துச்சென்ற மக்கள்- வீடியோ

    சென்னை: சென்னையில் இருந்து 6 நகரங்களுக்கு ஏ.சி. படுக்கை வசதி பஸ் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து மதுரைக்கு ஏ.சி. படுக்கை கட்டணம் ரூ.975 ஆகும். சென்னை-மதுரை ஏ.சி வசதி அல்லாத படுக்கை வசதிக்கு ரூ.725, சென்னை- திண்டுக்கல் இடையே விடப்பட்டுள்ள கழிப்பிட வசதியுள்ள அல்ட்ரா டீலக்ஸ் பஸ்சுக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    தமிழகத்தின் பல நகரங்களில் இருந்தும் தலைநகர் சென்னைக்கு சென்று ஏராளமானோர் வேலை செய்கின்றனர். பயணத்திற்கு தேர்வு செய்வது தனியார் பேருந்துகளைத்தான். ஆயிரக்கணக்கில் செலவு செய்து பயணம் செய்கின்றனர். பண்டிகை காலங்களில் கேட்கவே வேண்டாம் கட்டணக்கொள்ளை அதிகரிக்கிறது. இதனை கட்டுப்படுத்தவே அரசு சொகுசு வசதியுள்ள பேருந்துகளை இயக்குகிறது.

    SETC Bus connectivity to Chennai

    அரசு பஸ்களில் பயணம் செய்யவே பொதுமக்கள் பயணம் செய்யவே பொதுமக்கள் அச்சப்பட்டதற்கு காரணம் ஓட்டை உடைசல் பஸ்தான், உடைந்த சீட்கள், படிகள் இல்லாத பஸ்கள், ஒழுகும் கூரைகள் என கந்தரகோலமாக இருக்கும். அரசு போக்குவரத்து கழகத்துக்கு டீசல் செலவை ஈடுகட்ட முடியாத அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

    புதிய பஸ்களை அறிமுகம் செய்தால் மட்டுமே போக்குவரத்து கழகத்துக்கு வருவாயை பெருக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டது. நேற்று முதல் கட்டமாக 515 புதிய பஸ்களை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். தனியார் ஆம்னி பஸ்சுக்கு இணையான அனைத்து வசதிகளும் தற்போது அரசு போக்குவரத்துக்கழக பஸ்களில் உள்ளன.

    புதிய பஸ்களில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளனர். தனியார் ஆம்னி பஸ்சுக்கு இணையான அனைத்து வசதிகளும் இவற்றில் உள்ளன. படுக்கை வசதி, கழிப்பிட வசதி, சி.சி.டி.வி. கேமரா, சொகுசு இருக்கைகள், உள்ளிட்ட பல வசதிகள் பயணிகளுக்கும், டிரைவருக்கும் பயனுள்ள வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

    புதிய பஸ்கள் 8 போக்குவரத்து கழகங்களுக்கும் பிரித்து ஒதுக்கப்பட்டன. அதில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 40 பஸ்கள் முதல் கட்டமாக வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் சென்னையில் இருந்து 18 பஸ்கள் நேற்று இயக்கப்பட்டன.

    சென்னையில் இருந்து மதுரைக்கு ஏ.சி. படுக்கை கட்டணம் ரூ.975, சேலம் ரூ.725, போடிநாயக்கன்பட்டி ரூ.1110, ஈரோடு ரூ.905, கரூர் ரூ.820 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. கோவை-பெங்களூர் இடையே இயக்கப்படும் ஏ.சி. படுக்கை வசதி பஸ்சுக்கு ரூ.805 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சென்னை-மதுரை ஏ.சி வசதி அல்லாத படுக்கை வசதிக்கு ரூ.725, சென்னை- திண்டுக்கல் இடையே விடப்பட்டுள்ள கழிப்பிட வசதியுள்ள அல்ட்ரா டீலக்ஸ் பஸ்சுக்கு ரூ.500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

    விரைவு போக்குவரத்து கழகத்துக்கு 100 புதிய பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில் 40 ஏ.சி. படுக்கை வசதி பஸ்களாகும், 50 அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களில், 10 கழிவறை வசதி கொண்ட அல்ட்ரா டீலக்ஸ் பஸ்களாகும். இவற்றில் முதல் கட்டமாக 40 பஸ்கள் ஒதுக்கப்பட்டுள்ளது என்று விரைவு போக்குவரத்துக்கழக அதிகாரிகள் தெரிவித்தனர். ஆகஸ்டு மாதத்துக்குள் மீதமுள்ள பஸ்கள் வந்து விடும். நீண்டதூரம் செல்லக்கூடிய பஸ்களில் பயணிகளுக்கு வசதிகளை செய்து கொடுத்தால் அதிகளவு பயணிப்பார்கள். புதிய சொகுசு பஸ்கள் விடப்பட்டதால் இனி பயணிகள் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    English summary
    According to official sources, on Monday luxurious AC sleeper buses were introduced on the routes of Chennai-Salem, Chennai-Erode, Chennai-Madurai, Chennai-Gopichettipalayam, Chennai-Bodinayakkanur and Coimbatore-Bengaluru, replacing the existing SETC buses. Ticket fare to Madurai from Chennai costs Rs 950 per person (excluding online booking charges and GST), while a passenger needs to spend around Rs 700 for going to Salem.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X