For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்.... அமேசானை எச்சரித்த சக்தி காந்த தாஸ்

இந்திய தேசியக் கொடி மிதியடி, கேன்வாஷ் ஷூக்களை விற்பனை செய்த அமேசான் ஆன்லைன் நிறுவனம் மீண்டும் வாலாட்டத் தொடங்கியுள்ளது. காந்தி படத்தை செருப்பில் போட்டுள்ளது. அமேசானுக்கு மத்திய பொருளாதார விவகாரங்களுக்

By Super Admin
Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியப் பிரபலங்கள் மற்றும் சின்னங்கள் குறித்து எச்சரிக்கையுட‌ன் செயல்படத் தவறினால், உடனடியாக ஆபத்தைச் சந்திக்க நேரிடும் என்று அமேசான் நிறுவனத்தை சக்தி காந்த தாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் எச்சரித்துள்ளார்.

இந்தியாவை அடுத்தடுத்து அவமதித்து வருகிறது அமேசான். தற்போது இந்தியாவே தேசப்பிதா என மதிக்கும் மகாத்மா காந்தியின் படத்தை செருப்பில் பிரிண்ட் செய்து விற்பனைக்கு வைத்துள்ளது.

ஆன்லைன் மூலம் பொருட்களை விற்கும் நிறுவனங்களில் அமேசான் நிறுவனம் முன்னனியில் உள்ளது. ஆனால் இந்த அமேசான் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவை அவமதித்து வருகிறது.

தேசியக்கொடி மிதியடி

தேசியக்கொடி மிதியடி

இந்திய தேசிய கொடி வண்ணத்தில் மிதியடி, தேசிய கொடி வண்ணத்தில் ஷூ விற்பனைக்கு வைத்து இந்தியாவை அவமானப்படுத்தியது கனடா நாட்டிற்கான அமேசான் இணையதளம். இந்த விவகாரம் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஸ்மா சுவராஜ் கண்டனம் தெரிவித்தார்.

தேசிய கொடி ஷூக்கள்

தேசிய கொடி ஷூக்கள்

அமேசான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்ட அடுத்த நாளே மேலும் ஒரு பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. தேசிய கொடி வண்ணத்தில் அசோக சக்ரா பொறித்த கேன்வாஷ் ஷூக்களை விற்பனை செய்தது.

மகாத்மா காந்தி படம்

மகாத்மா காந்தி படம்

அதோடு நிற்காமல் தற்போது தேசத் தந்தை மகாத்மா காந்தியின் படத்தை செருப்பில் அச்சிட்டு விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. இந்தியாவை இதை விட அவமானப்படுத்த முடியாது என்று கூறும் வகையில் செயல்பட்டு வருகின்றது அமேசான் நிறுவனம்.

சக்தி காந்த தாஸ்

இந்தியர்களின் உணர்வுகளை தூண்டினால், அமேசான் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும். இதை நான் ஒரு இந்தியக்குடிமகனாக தெரிவித்துகொள்கிறேன் என்று பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் சக்தி காந்த தாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பின்விளைவு ஏற்படும்

இந்தியப் பிரபலங்கள் மற்றும் சின்னங்கள் குறித்து எச்சரிக்கையுட‌ன் செயல்படத் தவறினால், உடனடியாக ஆபத்தைச் சந்திக்க நேரிடும்.நடத்தையை சரிப்படுத்த தவறினால் பின்விளைவு உடனே ஏற்படும் என்றும் சக்திகாந்த தாஸ் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

புறக்கணிப்பார்களா?

புறக்கணிப்பார்களா?

அமேசான் நிறுவனம் ஒருமுறை, இருமுறையை கடந்து தற்போது வேண்டுமென்றேன் இந்தியாவின் மதிப்பு மிக்க சின்னங்கள், முக்கிய பிரமுகர்களைப் போட்டு அவமதிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. அமேசான் விற்பனை செய்யும் பொருட்களை புறக்கணித்தால் மட்டுமே இதுபோன்ற செயல்களில் அமேசான் ஈடுபடாது

English summary
Shaktikanta Das strong warning Amazon,better behave. Desist from being flippant about Indian symbols and icons. Indifference will be at your own peril.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X