For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பங்கு சந்தைகளில் பெரும் சரிவு.. மாலையில் லேசாக மீண்டது

Google Oneindia Tamil News

டெல்லி: மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் வெள்ளிக்கிழமை அதிகபட்சம் 1000 புள்ளிகள் குறைந்து 36,841.60 புள்ளிகளுடன் நிறைவடைந்தது.

தேசிய பங்குச்சந்தை நிப்டி இன்று பெரும் சரிவை சந்தித்தது. மாலை நேரம் பங்குச்சந்தை முடிவடையும்போது சென்செக்ஸ் 279 புள்ளி 62 குறைந்து 36 ஆயிரத்து 841 புள்ளிகளுடன் காணப்பட்டது.

ஜூலை 25ம் தேதியில் இருந்து, இதுவரை சந்தித்த மிகப்பெரிய சரிவு இதுவாகும்.

Share markets see a fall in India

என்பிஎஃப்சி என்றழைக்கப்படும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் பங்குகள் இறக்கம் காணத் தொடங்கியது தான் இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது. வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் அதுவும் குறிப்பாக பல ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனங்களின் பங்கு விலைகள் விரைவாகச் சரிவைக் கண்டன. சரிவின் அளவு நிறுவனத்துக்கு நிறுவனம் 10 முதல் 50 சதவிகிதம் வரை மாறுபடுகிறது.

இந்த திடீர் சரிவிற்கு பிறகு சற்றே நிலை கொண்ட நிஃப்டி, தற்போது மீண்டும் சீராக வர்த்தகமாகி வருகிறது. இந்த திடீர் சரிவு நடந்தது எல்லாம் மதியம் சுமார் 1 மணியளவில் இருக்கும். ஏனெனில் அப்போது சென்செக்ஸ் 1,100 புள்ளிகளும், நிப்டி 340 புள்ளிகளும் சரிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
The fall came on the back of a massive selloff in NBFCs, led by DHFL which skidded over 50 per cent on fears of a liquidity crisis.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X