For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பசுமை பட்டாசு உத்தரவால் சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வில் புயல் - சென்னையில் போராட்டம்

பேரியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருளை பட்டாசு உற்பத்தியில் பயன்படுத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறி உள்ளதை அடுத்து சிவகாசியில் உள்ள ஆயிரக்கணக்கான ஆலைகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. இதனால் லட்சக்கணக்

Google Oneindia Tamil News

Recommended Video

    சிவகாசியில் பட்டாசு தொழிலாளர்கள் வாழ்வில் புயல் - சென்னையில் போராட்டம்

    சிவகாசி: குறைவாக மாசுபடுத்தும் மேம்படுத்தப்பட்ட நவீன வகை பட்டாசுகளை அதாவது பசுமை பட்டாசுகளை மட்டுமே இனிமேல் தயாரிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருக்கிறது. இது பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள், ஆயிரக்கணக்கான பட்டாசு உரிமையாளர்களின் வாழ்வினை முடக்கி போட்டுள்ளது. பட்டாசுக்கான தடையை நீக்கக் கோரி தொழிலாளர்கள் சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    நாடு முழுவதும் பட்டாசு உற்பத்தி மற்றும் வெடிப்பதற்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம், சில நிபந்தனைகளை விதித்து தீர்ப்பளித்தது. அதன்படி பேரியம் குறைவான மற்றும் குறைவாக புகை வெளியிடும் பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும், பட்டாசு வெடிக்க 2 மணி நேரம் மட்டுமே அனுமதி உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்தனர்.

    Sivakasi Traders Dont Know What Green Crackers - Protest in Chennai

    மேலும் சுற்றுச்சூழலுக்கு கேடு இல்லாத பசுமை பட்டாசுகளை உற்பத்தி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதற்கு பட்டாசு உற்பத்தியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து வேலைநிறுத்தத்தை தொடங்கியுள்ளனர். அவர்களின் வேலை நிறுத்தம் தொடர்கிறது.

    விருதுநகர் மாவட்டத்தில் 1,400 பட்டாசு ஆலைகளும் இந்தியாவில் மற்ற பகுதியில் 500க்கும் மேற்பட்ட ஆலைகளும் உள்ளன. உச்சநீதிமன்றம் விதித்த கடும் நிபந்தனைகள் எதிரொலியாக தற்போது எந்த பட்டாசு ஆலையும் இயங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தீர்ப்பில் பட்டாசு வெடிக்க, விற்பனை செய்ய தடை இல்லை என்று கூறிவிட்டு, பல நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அந்த நிபந்தனைகள் நடைமுறைக்கு சாத்தியம் இல்லாதவை.

    Sivakasi Traders Dont Know What Green Crackers - Protest in Chennai

    பேரியம் நைட்ரேட் என்ற வேதிப்பொருளை பட்டாசு உற்பத்தியில் பயன்படுத்தக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறி உள்ளது. ஆனால் அது இல்லாமல் பட்டாசு தயாரிக்க முடியாது. அப்படி தயாரித்தால் அது வெளிச்சம் கொடுக்காத பட்டாசாக இருக்கும்.

    பட்டாசு வெடிப்பதற்கும் தயாரிப்பதற்கும் பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தது உச்ச நீதிமன்றம். இரண்டு மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க வேண்டும், பசுமைப் பட்டாசுகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இதனால், பட்டாசு ஆலை உரிமையாளர்களுக்குப் பாதிப்புகள் அதிகமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல லட்சம் ரூபாய் பட்டாசுகளின் விற்பனை பாதிக்கப்பட்டது.

    உச்சநீதிமன்ற தீர்ப்பினை மறுபரிசீலனை செய்ய வலியுறுத்தி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் கால வரையற்ற போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதனால் பட்டாசு ஆலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

    வழக்கமாகவே தீபாவளியை அடுத்து, பட்டாசு ஆலைகள் குறைந்தபட்சம் ஒரு மாத காலத்துக்கு மூடப்படும். ஆனால், உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள போராட்டம், மறுதீர்ப்பு வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட நேரக்கட்டுப்பாடு காரணமாக

    இதனிடையே அரசின் கவனத்தை கவரும் வகையில் தமிழகத்தில் பட்டாசு தொழிலை பாதுகாக்க வலியுறுத்தியும், பட்டாசு தொழில்களுக்கான தடைகளை நீக்கக்கோரியும் இன்று காலை 10 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பட்டாசு வியாபாரிகள் கடையடைப்பு செய்து போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.

    போராட்டத்தின் முடிவில் கோரிக்கையை வலியுறுத்தி முதல்அமைச்சரிடம் மனு கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

    English summary
    The fireworks industry in Sivakasi claimed closure of factories would not only affect around 800,000 families, who are relying on this industry. It may be noted, nearly 1,400 units in Sivakasi.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X