For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பெர்சனல் லோன் வாங்குவதில் கன்னடர்கள் முதலிடம் - தமிழர்கள் நம்பர் 2 - ரிசர்வ் வங்கி

ரூ.1.6 லட்சம் கோடி கடன் வாங்கி முதலிடத்தில் கர்நாடகா உள்ளது. ரூ.1.5 லட்சம் கோடி கடன் வாங்கி இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    பெர்சனல் லோன் வாங்குவதில் கன்னடர்கள் முதலிடம் - ரிசர்வ் வங்கி- வீடியோ

    டெல்லி: 2017-18 நிதியாண்டில் அதிகளவில் தனிப்பட்ட கடன்கள் வாங்கி தென்னிந்திய மாநிலங்கள் முன்னிலையில் இருப்பதாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது.

    லோன் வாங்குறீங்களா சார் என்று நிமிடத்திற்கு நிமிடம் போன் போட்டு வங்கிகள் லோன் கொடுத்ததன் விளைவு தென்னிந்தியர்கள்தான் அதிக அளவில் பெர்சனல் லோன்களை வாங்கியுள்ளனர்.

    South Indians save and borrow the most

    தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் அதிகமாகக் கடன் வாங்கிய மாநிலமாக கர்நாடகா உள்ளது. இம்மாநிலத்தில் ரூ.1.6 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை:

    2017-18 நிதியாண்டில் தென்னிந்திய மாநிலங்களில் வாங்கப்பட்ட தனிப்பட்ட கடன் மதிப்பு ரூ.5.7 லட்சம் கோடியாகும்.

    வட மாநிலங்களில் ரூ.2.5 லட்சம் கோடியும், மேற்கு மாநிலங்களில் ரூ.3.9 லட்சம் கோடியும் வங்கிகளில் தனிப்பட்ட கடன்களாக வாங்கப்பட்டுள்ளது.

    முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2017-18ஆம் நிதியாண்டில் தென்னிந்தியாவின் தனிப்பட்ட கடன் மதிப்பு 37 சதவிகித உயர்வைக் கண்டுள்ளது. வட மாநிலங்களின் தனிப்பட்ட கடன் மதிப்பு 21 சதவிகிதமாகும். மேற்கு மாநிலங்களின் கடன் மதிப்பு 14 சதவிகித உயர்வைக் கண்டுள்ளது.

    தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் அதிகமாகக் கடன் வாங்கிய மாநிலமாக கர்நாடகா உள்ளது. இம்மாநிலத்தில் ரூ.1.6 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. ரூ.1.5 லட்சம் கோடி கடன் வாங்கி தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது.

    கேரளா ரூ.91,000 கோடியும், தெலங்கானா ரூ.90,200 கோடியும், ஆந்திரா ரூ.72,100 கோடியும் கடன் வாங்கியுள்ளன.

    தனியார் கடன் நிறுவனங்களின், குறிப்பாக மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்களின் ஊடுருவல் தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களில் வேகமாக அதிகரித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

    அதே போல வங்கிகளில் பணத்தை டெபாசிட் செய்வதில் மேற்கு மாநிலங்கள் முதலிடத்தில் உள்ளன. கடந்த நிதியாண்டில் 28 லட்சம் கோடி ரூபாய் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. தென்னிந்தியர்கள் ரூ 25 லட்சம் கோடி பணத்தை டெபாசிட் செய்துள்ளனர். வட இந்தியர்கள் 25 லட்சம் கோடி ரூபாயை டெபாசிட் செய்துள்ளனர்.

    English summary
    Southern states are the largest borrowers of personal loans disbursed by scheduled commercial banks across the country, as per latest Reserve Bank of India data. RBI says while deposits grew by 13.1 per cent in FY17, banks disbursed personal loans worth Rs 5.7 lakh crore across the south.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X